Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

இந்தியாவில் நடந்துமுடிந்த தேர்தலுக்கு பின்பு இடதுசாரிகள் ஆளும் வர்க்கத்தாலும், முதலாளித்துவ ஊடகங்களாலும் கருத்து ரீதியாக மிகக் கடுமையாகத் தாக்கப்படுகின்றனர். காரணம் தொடர்ச்சியாக மக்கள் நலன் சார்ந்து நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் போராடி வருவதுதான். உலகமயத்தை எதிர்த்தும், இந்திய நாட்டின் நிலப்பிரபுத்துவ முதலாளித்துவ சக்திகளை எதிர்த்தும் சமரசமற்றப் போராட்டத்தை நடத்தி வருவதால், இவர்களின் முக்கிய எதிரியாக இடதுசாரிகள் பார்க்கப்படுவது தவிர்க்க முடியாததாக மாறுகிறது. மற்றொரு பக்கம் இந்தியாவில் உள்ள இடது அதிதீவிரவாதிகள் மற்றும் மத, இன அடிப்படைவாதிகளால் தொடர்ந்து தாக்கப்படும் சக்தியாகவும் இடதுசாரிகளே இருக்கின்றனர். ஒரு முற்போக்கான சமூக மாற்றத்திற்காகப் போராடும் இடதுசாரிகளுக்கு ஆதரவாய் நிற்பதும், தேசத்தின் எதிர்காலத்தை பாதுகாப்பதும் தொடர்புள்ள சம்பவங்கள் என்பதால், இடதுசாரிகளின் எதிர் சக்திகள் எவையென அடையாளம் கண்டு அந்த சக்திகளை எதிர்த்த கருத்துப் பிரச்சாரத்தையும், களப்போராட்டத்தையும் நடத்த வேண்டியது இடதுசாரி இளைஞர் அமைப்புகளின் கடமையாகும். எதிர் சக்திகள் எவையெவை என பார்ப்போம்.

இடது அதிதீவிர வாதிகள்:

“வர்க்க எதிரியை கொலை செய்வது வர்க்கப் போராட்டத்தின் உயர்ந்த வடிவமாகும். அதே நேரத்தில் கொரில்லாப் போராட்டத்தின் மூலம் வர்க்க எதிரியை கொல்லுவது கொரில்லா போராட்டத்தின் ஆரம்ப கட்டமாகும். முதல்கட்ட நடவடிக்கையுடன் நெருங்கியத் தொடர்புடையது இரண்டாவதுகட்டம், நிலப்பிரபுத்துவ சக்திகளின் வெள்ளை பயங்கரத்திற்கு எதிராக சிவப்பு பயங்கரத்தை உருவாக்க வேண்டும். நமது அரசியலின் அடிப்படை, வர்க்க விரோதிகளை அழித்தொழிப்பதுதான். அவர்களை துன்புறுத்துவதோ, பகைத்து கிராமத்தைவிட்டு விரட்டுவதோ அல்ல. ஏனெனில் கொலை செய்வதன் மூலமாகவே எதிரியின் மனஉறுதியை குலைக்க முடியும்’’ - சாரு மஜும்தார் என்ற நக்சல் தலைவரின் சித்தாந்தம்தான் இது. (கம்யூனிஸ்ட் கட்சியும் தனிநபர் பயங்கரவாதமும் நூலிலிருந்து) இந்தத் தத்துவத்தின் அடிப்படையில் இயங்கியவர்களை மக்கள் ஒதுக்கித் தள்ளியதன் விளைவு இன்று பல நக்சல் இயக்கங்கள் மறைந்து விட்டன, சில இன்னும் இந்தப் பாதையிலேயே பயணிக்கின்றன.

நல்சல்பாரி என்ற இடத்தில் துவக்கப்பட்ட இடது அதிதீவிரவாத இயக்கம், தங்களுக்குள் ஏற்பட்ட பல கருத்து வேறுபாட்டால் பல நூறு குழுக்களாக பிளவுபட்டு பல பெயர்களில் செயல்பட்டு வருகின்றனர். மாவோயிஸ்டுகள், நக்சலைட்டுகள், மற்றும் புரட்சிகரப் பெயரை வைத்துள்ள பல அமைப்புகள் இந்தப் பிரிவை சார்ந்தவைதான். காரல்மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ போன்ற புரட்சியாளர்களின் தத்துவங்களை இந்திய சூழலுக்கு பொருத்திப்பார்க்காமல் பயன்படுத்துபவர்கள். இவர்கள் புறச் சூழலை கணக்கில் எடுக்காமல் உடனடியாக புரட்சியை நடத்த வேண்டும் என பேசி வருபவர்கள். தீவிரவாத எண்ணத்தால் உந்தப்பட்டு பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள். தன்னுடைய எதிரி நிலப்பிரபுக்களும், பெரும் வட்டிக்காரர்களும் என்பதை தத்துவரீதியாக சுட்டும் இவர்கள் நடைமுறையில் அவர்களிடம் சமரசம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதற்கு சிறந்த உதாரணம் மேற்குவங்கம். அங்கு பெரும் நிலப்பிரபுக்களும், முதலாளிகளும் அதிகமாக தஞ்சம் புகுந்துள்ள அரசியல் இயக்கங்கள் மம்தாவின் திரினாமுல் காங்கிரஸ் கட்சியும், இந்திய தேசிய காங்கிரசும்தான், ஆனால் இப்படிப்பட்ட உழைப்பாளி வர்க்கத்திற்கு எதிரான கட்சிகளுடன் சேர்ந்துகொண்டு இடதுசாரிகளையும், அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் சாதாரண மக்களையும் படுகொலை செய்து வருகின்றனர். அதைவிடக் கேவலம் அத்வானி போன்ற மத அடிப்படைவாதியை ‘மாவோயிஸ்டுகள்’ என்று தம்மை அழைத்துக் கொள்பவர்கள் மாலை அணிவித்து வரவேற்றதுதான். இவர்கள் படுகொலை செய்த ஆயிரக்கணக்கான மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்களும், பொதுமக்களும் இவர்களின் வறட்சித்தத்துவம் குறிப்பிடும் நிலப்பிரபுக்களோ, பெருவட்டிக்காரர்களோ அல்ல. அப்பாவிகளாய் அன்றாடம் வயிற்றுப்பாட்டுக்கு உழைக்கும் மக்கள்தான். 1967களிலிருந்து இதை செய்பவர்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக மக்களோடு இணைந்து நிற்கும் மார்க்சிஸ்டுகளை அரசியல் ரீதியாக வெல்ல முடியாத விரக்தியில் படுகொலை பாதையில் பயணம் செய்கின்றனர். நந்திகிராமும், லால்கரும் இவர்களின் தற்போதைய இலக்கு. பொய் பிரச்சாரங்களை அப்பாவி மக்களிடம் சொல்லி அவர்களின் பின்னால் நின்று ஆயுதம் தூக்கித் திரிகின்றனர். இந்தியாவில் உள்ள உழைப்பாளி மக்களின் குரலை அரசியல் அரங்கில் ஒலிக்கச்செய்யும் இடதுசாரி சக்தியை அழித்திட ஏகாதிபத்திய சக்திகளுக்கு அப்பட்டமாய் இவர்கள் துணைபோகின்றனர்.

அடிப்படைவாதிகள்

சாதி, மத, இன, மொழி, வட்டாரம் என்ற அடையாள அரசியலை நடத்திவரும் பல அடிப்ப டைவாத அமைப்புகளும் இன்று இந்தியாவில் இடதுசாரிகளையே குறிவைத்து தாக்குதல் தொடுக்கின்றனர். ஏதோ ஒரு அடையாளத்தை முன்வைத்து அந்த அடையாளம் சார்ந்த மக்களை திரட்டும் இத்தகைய சக்திகள், தங்களது நோக்கம் என்று ஒன்றை அறிவித்தாலும் அவர்களுக்கு உள்ளுக்குள் ஒரு நோக்கம் இருக்கும். உதாரணத்திற்கு ஆர்.எஸ்.எஸ் என்ற மத அடிப்படைவாத அமைப்பு தன்னை ஒரு கலாச்சார அமைப்பு என்று அறிவித்துக்கொண்டாலும் அவர்களது நோக்கம் அகண்ட பாரதம் என்கிற இந்துமத அடிப்படைவாத தேசத்தை உருவாக்குவதுதான். அதேபோல அல்-உமா என்கிற இஸ்லாமிய மத அடிப்படை வாதத்தை போதிக்கின்ற அமைப்பும் மற்றும் இன, மொழி, சாதி அடையாளங்களை வைத்து செயல்படும் அமைப்புகளும் தங்கள் உள்ளார்ந்த நோக்கங்களை வெளிப்படையாக அறிவிப்பதில்லை. ஆனால் இவர்கள் இந்திய நாட்டின் ஆளும் வர்க்க நலனை பாதுகாப்பதிலும், அமெரிக்க ஏகாதிபத்திய நலனை பாதுகாப்பதிலும் சொல்லிவைத்தார் போல ஒரே நிலைப்பாட்டை எடுப்பார்கள்.

வாழ்க்கை மிகக்கொடுமையான சூழலுக்குத் தள்ளப்பட்ட, இந்திய நாட்டில், மக்கள் தொகையில் 80 சதமான உழப்பாளி மக்கள் தங்கள் வாழ்க்கை நெருக்கடிகளை உடைத்தெரிந்திட ஒன்றுபட்ட தொழிலாளி வர்க்கமாய் அணிதிரள்வது அவசியம். ஆனால் இந்த நாட்டின் ஆளும் வர்க்கத்திற்கும், உலக பன்னாட்டு முதலாளிகளுக்கும், உள்ளூர் முதல் தேசத்தின் பல பகுதிகள் வரை நிலங்களை குவித்து வைத்திருக்கும் நில உடைமையாளர்களுக்கும், இந்தியநாடு சுதந்திரம் பெற்றதும் “வந்தே மாதரம்.......’’ விளம்பரம் செய்து தேசத்தை சுரண்டிக்கொண்டிருக்கும் ‘’பில்லியன் டாலர்’’ தேசிய முதலாளிகளுக்கும் தொழிலாளி வர்க்கம் ஒன்று திரள்வது ஆபத்தானது. எனவே இந்த உழைக்கும் வர்க்கம் ஒன்றாய் இணைந்திடாமல் தடுத்திட காலகாலமாய் கலாச்சாரம் என்ற பெயரில் மக்களுக்கு எதிரான கருத்துக்கள் மக்களது மனங்களில் விதைக்கப்பட்டுள்ளது. அதுவே பல பெயர்களில் மக்களை பிளவுபடுத்தி சிதறிட வைக்கிறது. இந்த கலாச்சாரம் என்ற கருவியை மேற்கண்ட சக்திகள் தங்களுடைய திரட்சிக்கு பயன்படுத்துகின்றனர். உழைக்கும் மக்கள் ஒற்றுமை சீர்குலைவதால் ஆளும் வர்க்கமும் இதை வளர்ப்பதில் அக்கரை கொள்கின்றன.

ஆக இந்த அடையாள அரசியலை யார் எதிர்த்தாலும் அவர்களுக்கு எதிராக இத்தனை சக்திகளும் ஒன்று திரண்டு தாக்குதல் தொடுப்பது எந்த வர்க்க நலனின் அடிப்படையில் என்பது சொல்லாமலே புரியும்.. ஆனால் இந்த சக்திகளை சமரசமற்ற முறையில் எதிர்ப்பது யார் என்ற கேள்வி முக்கியமானது. ஏனெனில் நமது நாட்டில் இன்றும் பல அரசியல் இயக்கங்கள் புதிது புதிதாக துவக்கப்படுகின்றது. துவங்கும் போது அவர்கள் அறிவிப்பவை எல்லாம் மிகவும் புரட்சிகரமாக இருக்கிறது. சில மாதங்களில் அவர்கள் சாயம் மெல்ல, மெல்ல வெளுத்து அவர்களது வர்க்கச் சார்பு வெளிப்படுகிறது. ஆனால் இடதுசாரிகள் இவர்களை எதிர்த்தும், உழைப்பாளி மக்களை அணிதிரட்டி, தொடர்ந்து போராடி வருகின்றனர். இதனால்தான் இவர்கள் குறிவைத்து தாக்கப்படுகின்றனர்.

பிரஷர் குக்கர் அமைப்புகள் மற்றும் ஊடகங்களின் தாக்குதல் தங்களை அதிநவீனர்களைப் போல காட்டிக்கொள்ளும் பல அரசுசாரா தொண்டு நிறுவனங்களும் பரபரப்பாக செய்திகளை வெளியிடும் பத்திரிகைகளும்.. உலகமயதாக்குதலால் நெருக்கடிக்குள்ளான வாழ்வியல் பிரச்சனைகளுக்குள்ளான இம்மக்களை முற்போக்காக பேசி, பிரச்சனையின் உண்மையான பகுதியை காட்டாமல் மக்களுக்கு ‘’சேவை’’’ செய்யும் பல அமைப்புகள் மக்கள் வாழ்வியல் பிரச்சைனைகளுக்கு உதவி என்ற பெயரில் மக்கள் மனதை பாழ்படுத்துகின்றனர். இவர்களுக்கு வெளிநாடுகளிலிருந்து வரும் கோடிக்கணக்கான ரூபாய் பணம் மிகவும் திட்டமிட்டு விளிம்புநிலை மக்கள் மீது திருப்பிவிடப்படுகிறது. வேலையில்லாமல் அலையும் பல இளைஞர்கள்: தங்களை அறியாமலே இவர்களின் முகவர்களாக மாறுகின்றனர்.

2004ஆம் ஆண்டு சுனாமி வந்தபோது, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், கடற்கரையோர கிராமங்களிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தனது உழைப்பு சக்திகள் அனைத்தையும் பயன்படுத்தி தனது கடமையை செய்தது. சுனாமி பாதித்த ஓர் ஆண்டு இறுதியில் அந்த மக்களின் வாழ்வாதார பிரச்சனைகளின் கோரிக்கைக்காக வாலிபர் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடந்த போது பலகிராம மக்கள் அந்த போராட்டங்களில் பங்கெடுத்தனர். ஆனால் அந்த கிராமப்புற உழைப்பாளி மக்களிடையே தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் பணியாற்றத் துவங்கியதும், அம்மக்களின் மனநிலையில் நிறைய மாறுதல்கள் உருவாகத்துவங்கியது. சுனாமியால் பாதிக்கப்பட்டத் தங்களை பாதுகாப்பது அரசின் கடமை என்ற எண்ணம் மாற்றப்பட்டது. தங்களது அடிப்படை உரிமைகளை சலுகைகளாகப் பார்க்கத் துவங்கினர்.

“புராஜெக்டுடன்” களமிறங்கிய பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் வலை, வீடு, பணம், என வாரிவழங்கி போராட்ட குணத்தை மழுங்கடித்து, யார் கிராமத்திற்கு வந்தாலும் என்ன தருவார்கள் என்று எதிர்பார்க்க வைத்தனர். அம்மக்களை இத்தகைய அமைப்புகள் ‘கொதிக்கும் குக்கரினுள் உள்ள வெப்பம் வெடித்தெழாமல் இருக்க விசில் எப்படி உதவுகிறதோ’ அப்படி சமூகத்தினுள் எழும் நெருக்கடி, இந்த ஆளும் வர்க்கத்துக்கு எதிராக எழாமல் இருக்க உதவுகின்றன. இவர்கள் போராட்டப் பாதைக்கு மக்கள் திரும்பாமல் பாதுகாக்கின்ற வேலைகளை மட்டுமல்ல, எந்தப் பாதைக்கு எதிராகவும் மக்களை எளிதாக திசைதிருப்புகின்றனர். இவர்கள் இடதுசாரிகள் பக்கம் இந்திய நாட்டின் மக்கள் சென்றுவிடக்கூடாது என்பதில் மிக கவனமாய் இருக்கின்றனர். இடதுசாரிகளை எதிர்த்த பிரச்சாரத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். அதேபோல இந்திய நாட்டின் பெருமுதலாளிகளின் ஊடகங்களும், பன்னாட்டு நிறுவனங்களின் ஊடகங்களும் இடதுசாரிகளுக்கு எதிராக தொடர்ந்து அவதூறு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த காங்கிரஸ் ஆட்சியை வெளியிலிருந்து ஆதரித்த இடதுசாரிகள் அந்த ஆட்சியாளர்களுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்தார்கள் என்ற பிரச்சாரம் தொடர்ந்து செய்யப்பட்டது. நூறு நாள் வேலை உறுதிச் சட்டமும், வன பாதுகாப்பு சட்டமும், தகவல் பெறும் உரிமைச் சட்டமும், பொதுத்துறையை பாதுகாக்க வேண்டும் என்று சொன்னதும், உணவு பாதுகாப்புக்கு குரல் கொடுத்ததும், அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனான அணு ஆயுத ஒப்பந்தம் ஏற்படக்கூடாது என்று சொன்னதும் நெருக்கடி என்று பிரச்சாரம் செய்யப்பட்டது.

இப்போது இடதுசாரிகளின் கடிவாளம் இல்லாததால் மக்களின் மீது தொடர்தாக்குதலை காங்கிரஸ் துவங்கி உள்ளது. ஆனால் இடதுசாரிகள் தோற்றதால் இந்தியா ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி நடை போடப்போவதாக அறிவித்து மகிழ்ந்தனர். ஆனால் பட்டினி சாவுகளும், வேலையின்மையும் முன்பைவிட அதிகரித்துள்ளது. ஆனாலும் இந்திய நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்வோம் என்று பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முதலாளிகளுக்கு ஆதரவாய் காங்கிரஸ் செயல்படுவதை எந்த பத்திரிகையும் சொல்வதில்லை அவர்கள் எதிர்பார்த்ததும் இதைத்தானே.

ஆக இன்று இந்தியாவில் உழைப்பாளி மக்களின் உண்மையான குரலாய் ஒலிக்கும் இடதுசாரிகள், பில்லியன் டாலர் முதலாளித்துவத்தை எதிர்த்து, நிலப்பிரபுத்துவ சக்திகளை எதிர்த்து, அடிப்படை வாதத்தை எதிர்த்து, முடைநாற்றம் அடிக்கும் சாதிய அடக்கு முறைக்கு எதிராக, புரட்சி என்று பம்மாத்து செய்து உண்மையான புரட்சிகர இயக்கங்களுக்கு இடையூறாக இருக்கும் சக்திகளை எதிர்த்து போராடுவதால்தான், இடது அதிதீவிரவாதிகள், அடையாள அரசியலை முன் நிறுத்தும் சக்திகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், ஊடகங்கள் என அனைத்தும் ஓரணியாய் அணிவகுத்து இடதுசாரிகளை பழிதீர்க்க நிற்கின்றனர். ஆனால் இந்தியாவில் உள்ள இடதுசாரிகள் மக்களிடம் உள்ள நம்பிக்கை காரணமாக தளராத உறுதியுடன் போராட்டப் பாதையில் முன்செல்கின்றனர். இந்தக் கூட்டை முறியடித்து முன்னேறுவர்

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Comments   

0 #1 மணியன்.சு 2009-10-01 02:45
மேற்கு வங்கத்தில் ஆளிகளிஸ்ட் கட்சி தோல்வியடைந்தற்க ு முக்கிய காரணம் அது தன் கொள்கைக்கு முரணாக நடந்து கொண்டது தான் காரணம். உபரிநிலங்களையும ், அரசு புறம் போக்கு நிலங்களையும், பெருநிலக்கிழார் களிடம் இருந்து பிடுங்கிய நிலங்களையும் ஏழை,எளிய விவசாயிகளுக்கு பிரித்துக் கொடுத்தது ஆளிகளிஸ்ட் அரசு.இதே அரசுதான் தொழில் வளர்ச்சி என்ற பெயரால் அதே எழை,எளிய விவசாயிகளிடம் இருந்து பிடுங்கி சர்வதேசமுதலாளிக ளுக்கும், டாடா போன்ற தேசிய முதலாளிகளுக்கும ் கொடுக்க முயன்றது. இது அவர்களின் கொள்கைக்கு எதிரானதே. ஆகவே தான் அவர்கள் தோற்றுப்போனார்க ள். ஆளிகளிஸ்ட் கட்சியின் சறுக்கலை திரிணாமூல் காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் தங்களுக்கு சாதகமாக பயன் படுத்திக் கொண்டார்கள்
Report to administrator
0 #2 egandan 2009-10-01 02:49
"தன்னுடைய எதிரி நிலப்பிரபுக்களு ம், பெரும் வட்டிக்காரர்களு ம் என்பதை தத்துவரீதியாக சுட்டும் இவர்கள் நடைமுறையில் அவர்களிடம் சமரசம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன ர்.

இதற்கு சிறந்த உதாரணம் மேற்குவங்கம். அங்கு பெரும் நிலப்பிரபுக்களு ம், முதலாளிகளும் அதிகமாக தஞ்சம் புகுந்துள்ள அரசியல் இயக்கங்கள் மம்தாவின் திரினாமுல் காங்கிரஸ் கட்சியும், இந்திய தேசிய காங்கிரசும்தான் , ஆனால் இப்படிப்பட்ட உழைப்பாளி வர்க்கத்திற்கு எதிரான கட்சிகளுடன் சேர்ந்துகொண்டு இடதுசாரிகளையும் , அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் சாதாரண மக்களையும் படுகொலை செய்து வருகின்றனர்." என்று சொல்கின்ற கட்டுரையாளார் கீழ்கண்ட விசயத்தையும் சொல்ல வேண்டும். மேற்குவங்க அரசு அதாவது இடதுசாரி அரசு உபரிநிலங்களையும ், அரசு புறம்போக்குநிலங ்களையும், நிலப்பிரக்களிடம ் இருந்து பறித்த நில்ங்களையும் எழை,எளிய விவசாயிகளுக்கு பிரித்துக் கொடுத்து தனது முற்போக்கு கொள்கையைக் காட்டியது. பின்னர் இதே இடத்சாரி அரசு தொழில்வளர்ச்சி என்ற பெயரால் அதே எழை எளிய விவசாயிகளிடம் இருந்து பிடுங்கி தனது கொள்கைக்கு மாறாக சர்வதேசிய முதலாளிகளுக்கும ், டாடா போன்ற தேசியமுதலாளிகளு க்கும் கொடுக்க முயன்றது. இந்த சறுக்கலைத்தான் திரிணமூல் காங்கிரசும், காங்கிரசும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு மார்க்ஸிஸ்ட் கட்சியை தேர்தலில் தோற்க்கடித்தனர் . ஆகவே இவர்களும் ஏகபோகங்களுக்கும ், தேசிய முதலாளிகளுக்கும ் துணைநின்று எழை, எளியவர்களுக்கு எதிரானவர்ளே என்பது உறுதியாகிறது.
Report to administrator
0 #3 சேதுபதி 2009-10-01 09:03
சிங்கூர், நந்திகிராம் பிரச்சனையில், மார்க்சிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுமுன்னணியின் அணுகுமுறை குறித்து விமர்சனம் இருக்கிறது. அந்த விமர்சனம் ஆக்கப்பூர்வமாக விவாதித்து திருத்திக் கொள்ளப்பட வேண்டியது.

ஆனால், அதையே சாக்காக வைத்துக் கொண்டு, இடதுமுன்னணியின் ஒட்டுமொத்த நடவடிக்கைகளையும ் கேள்வி எழுப்புவது, சரியானதல்ல!

மார்க்சிஸ்டுகள் நிலத்தைப் பறிக்கிறார்கள் என்று, தற்போது பலர் கூப்பாடு போடுகிறார்கள்.

ஆனால், இந்தியாவில் வேறு எங்குமே இல்லாத வகையில், மேற்குவங்கத்தில ், 13 லட்சம் ஏக்கர் நிலங்களை, ஏழை- எளிய மக்களுக்கு, மார்க்சிஸ்ட் கட்சியினர் பிரித்துக் கொடுத்தார்களே, அப்போது இவர்களெல்லாம் பாராட்டினார்களா , என்ன? இல்லையே...

விவசாயத்துறையில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக மேற்குவங்கம் மாறியிருப்பதற்க ு யார் காரணம்?

நாடெங்கும் விவசாயிகள் தற்கொலை அரங்கேறும் போது, மேற்குவங்கத்தில ் அது நிகழாதது ஏன்?

மத்திய அரசின் உதவியே இல்லாமல், மின் உற்பத்தியில் தன்னிறைவை மேற்குவங்கம் சாதித்தது எப்படி?

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், உள்ளாட்சி நிர்வாகம் சிறந்து விளங்கக் காரணம் என்ன?

50 சதவீதத்திற்கும் அதிகமான நிதியை உள்ளாட்சி அமைப்புக்களுக்க ு ஒதுக்கும் வேறு மாநிலம் எது?

நவகாளி நிகழ்ந்த பிரதேசம், அமைதிப் பூங்காவாக மாறியதன் பின்னணி என்ன?

- இவை பற்றியெல்லாம், மனத்தில் நிறுத்தாமல், சிங்கூர், நந்திகிராம் பிரச்சனையை சாக்காக வைத்துக் கொண்டு, கம்யூனிஸ்டுகளை வீழ்த்த துடிக்கிறார்கள்.

"மம்தா மாடல் புரட்சி"யை மேற்குவங்கத்தில ் நிகழ்த்திக் காட்ட மாவோயிஸ்டுகள் துடித்தால், அது அவர்கள் விருப்பம்.

அதற்காக அவர்கள் அத்வானியை மட்டுமல்ல; ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தையும் கூட அழைத்து வந்து கூட்டம் போட்டு ஆசி பெறலாம்.

மார்க்சிஸ்டுகளை வீழ்த்த வேண்டுமானால், தரகு கூட்டமான காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், மதவெறி பாஜகவோடும் கூட்டுச் சேரலாம் என்பதுதான் மாவோயிஸ்டுகளின் புதிய தத்துவம் என்றால் அது வெட்கக் கேடானது.

அழித்தொழிப்பு என்று நிலப்பிரபுக்களு க்கும், பெருமுதலாளிகளுக ்கும் எதிராக களம் புகுந்த நாம், எத்தனை நிலப்பிரபுக்களை யும், பெருமுதலாளிகளைய ும் இதுவரை கொன்று அழித்திருக்கிறோ ம் என்று நக்சலைட்டுகள் யோசித்து பார்த்தால் நல்லது.

மாறாக, மார்க்சிஸ்ட் கட்சியினரையும், அப்பாவி பொதுமக்களையும் ஈவிரக்கமின்றி, துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டு வீசியும் கொன்று குவிப்பதுதான், அழித்தொழிப்பா என்பது குறித்தும் அவர்கள் யோசிக்க வேண்டும்.
Report to administrator
0 #4 ஏகாந்தன் 2009-10-01 14:39
”சிங்கூர், நந்திகிராம் பிரச்சனையில், மார்க்சிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுமுன்னணியின் அணுகுமுறை குறித்து விமர்சனம் இருக்கிறது. அந்த விமர்சனம் ஆக்கப்பூர்வமாக விவாதித்து திருத்திக் கொள்ளப்பட வேண்டியது.

ஆனால், அதையே சாக்காக வைத்துக் கொண்டு, இடதுமுன்னணியின் ஒட்டுமொத்த நடவடிக்கைகளையும ் கேள்வி எழுப்புவது, சரியானதல்ல!

மார்க்சிஸ்டுகள் நிலத்தைப் பறிக்கிறார்கள் என்று, தற்போது பலர் கூப்பாடு போடுகிறார்கள்.”
நண்பர் சேதுபதி அவர்களுக்கு மார்க்ஸிஸ்ட் கட்சியின் கொள்கையில் ஏற்ப்பட்ட மாற்றத்தை அணுகுமுறையில் ஏற்ப்பட்ட மாற்றம் என்று ஒத்துக்கொண்டதற் க்கு முதலில் நன்றி.நீங்கள் சொல்வது எப்படி இருக்கிறது தெரியுமா?ஒரு குடிகாரக் கணவன் தன் மனைவியை அடிப்பதைக் கண்டவர்கள் அவனிடம் ஏன் இப்படி குடித்துவிட்டு மனைவியை அடிக்கிறாய் என்று கேட்டார்களாம், அதற்க்கு அவன் நான் கல்யாணம் ஆன புதிசில் சினிமாவிற்கு கூட்டிச்சென்றேன ், பூ வாங்கிக் கொடுத்தேன் அப்போதெல்லாம் யாராவது பாராட்டினீர்களா ? இப்போது மட்டும் கேட்க வந்துவிட்டீர்கள ே? என்றானாம். அதுபோல் இருக்கிறது
Report to administrator
0 #5 சேதுபதி 2009-10-03 10:34
தோழர் ஏகாந்தன் அவர்களுக்கு... வணக்கம்!

எனது கேள்வி, மனைவிக்கு பூ வாங்கிக் கொடுத்த போதெல்லாம், யாராவது பாராட்டினீர்களா ... இப்போது என் மனைவியை அடிக்கும் போது மட்டும் கேள்வி கேட்க வந்து வீட்டீர்களே... என்பதில்லை.

மாறாக, கணவன் - மனைவி இடையிலான பிரச்சனையில் பஞ்சாயத்து பண்ண வந்தவர்களெல்லாம ்... என்ன ஏதென்று விசாரிக்காமல், எடுத்த எடுப்பிலேயே “டைவர்ஸ்” என்று பேசுகிறார்களே…. .. ஏன்?, என்பதுதான்!

இன்னொன்றையும் இங்கு தெளிவுபடுத்த வேண்டியிருக்கிற து...

பூ வாங்கிக் கொடுத்ததுதான் இடது முன்னணி அரசு...

ஆனால், அந்தப் பூவை மம்தா மூலமாக பறிக்கும் வேலையை, அங்குள்ள- மாவோயிஸ்டுகள் என்று கூறிக்கொள்ளும் தோழர்கள்தான் செய்து கொண்டிருக்கிறார ்கள்...

இல்லை, மார்க்சிஸ்டுகள் தான் பறித்தார்கள் என்றால், எங்கேயெல்லாம் பறித்திருக்கிறா ர்கள்... எவ்வளவு பறித்திருக்கிறா ர்கள் என்ற விவரத்தையும், குற்றம் சாட்டுபவர்கள் தரலாம்... அல்லது எங்கேயெல்லாம் பறிக்க முயன்றார்கள்; எவ்வளவு ஏக்கர் நிலங்களைப் பறிக்க முயன்றார்கள் என்பதையாவது தரலாம்.

அதுமட்டுமல்ல, மத்திய அரசு மேற்குவங்கத்தில ் எத்தனை சிறப்புப் பொருளாதார மண்டலங்களைத் திட்டமிட்டது; மற்ற மாநிலங்களில் எவ்வளவு மண்டலங்களை அது திட்டமிட்டது; மேற்குவங்கத்தில ் கூடுதல் மண்டலங்களை திட்டமிடக் கூட, மத்திய அரசால் முடியாமல் போனது ஏன்; அதற்கான காரணம் என்ன? என்பது பற்றியும் விளக்கலாம்.

ஒருவேளை இடதுமுன்னணி அரசின் செயல்பாடுகளை சகிக்கவே முடியாது என்று அங்குள்ள மாவோயிஸ்டுகள் கருதினால், நேபாள மாவோயிடுகள் போல, மக்களைத் திரட்டி, அந்த அரசை அகற்ற முன்வரலாம்... அரசியல் ரீதியில் எதிர்கொள்ள முயலலாம்.

மாறாக, இடதுமுன்னணி அரசை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் மம்தாவை குடியேற்றிவிட்ட ால் போதும், மேற்குவங்கம் அப்படியே ஜொலித்து விடும், என்ற ரீதியில் மாவோயிஸ்டுகள் செயல்படுகிறார்க ளே...

இதுதான் புரட்சிகர தத்துவத்தின் நடைமுறைத் தந்திரமா?

அத்வானியை அழைத்து ஆசிபெறுவதான் மாவோயிஸ்டுகள் என்பதற்கு அடையாளமா?

இதுபற்றியெல்லாம், இடதுசாரி அரசியல் மீது அக்கறை உள்ளவர்கள் பேச மறுக்கிறார்களே. .. அது ஏன்?
Report to administrator
0 #6 ஏகாந்தன் 2009-10-04 11:13
நண்பர் சேதுபதி அவர்களுக்கு வணக்கம். என்னுடைய கேள்வி இடதுசாரி அரசு என்று கூறிக்கொண்டு அதற்கு மாறாக நடந்துகொள்ள முயன்றது சறுக்கலா?...இல் லையா?.இதற்கு நீஙகள் ” கணவன் - மனைவி இடையிலான பிரச்சனையில் பஞ்சாயத்து பண்ண வந்தவர்களெல்லாம ்... என்ன ஏதென்று விசாரிக்காமல், எடுத்த எடுப்பிலேயே “டைவர்ஸ்” என்று பேசுகிறார்களே…. .. ஏன்?, என்பதுதான்”என்ற ு கேட்டுள்ளீகள். நண்பரே கணவன் -மனைவி விவகாரம் நான்கு சுவர்களுக்குள் நடந்தால் யாருக்கும் தெரியாது, அதனால் யாரும் கேள்வி கேட்கமாட்டார்கள ். ஆனால் விவகர்ம் நடுவீதிக்கு வந்து நாலு பேர் நாலு கேள்வி கேட்கத்தான் செய்வார்கள்.நான ் சொல்வது அந்த மனைவியின் மனம் நோகாமல் குடும்பம் நடத்த முயற்சி செய்யுங்கள் என்பதுதான்.
Report to administrator
0 #7 சேதுபதி 2009-10-06 06:49
இடதுமுன்னணி அரசு தவறுபுரிந்துவிட க் கூடாது என்ற உங்களின் அக்கறையை வரவேற்கிறேன். நாடு முழுவதும் உள்ள இடதுசாரிகள், மேற்குவங்க இடதுமுன்னணி அரசுக்கு ஆக்கப்பூர்வமான ஆதரவை வழங்க வேண்டியது காலத்தின் தேவை என்பதையும் சுட்டிக்காட்ட விழைகிறேன்.
Report to administrator
0 #8 S.G.Rameshbabu 2009-10-08 22:33
பின்னூட்டம் செய்த நன்பர்களுக்கு நன்றி...
இந்தியாவில் நடந்த நில வினியோகத்தில் முதன்மை பங்குவகித்த.. ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மட்டுமல பெண்களுக்கும் கூட்டுபட்டா கொடுத்து, உபரி நிலங்கள் இல்லை என்ற நிலைமையை உருவாக்கியது மேற்கு வங்க அரசுதான்.
அதன் பிறகு... மேற்கு வங்க அரசு உதாரண அரசாய் மாறியது இந்திய வரலாறு.
அறிவியல் தொழில் நுட்பம் வளர வளர வேலைவாய்ப்பை கொடுக்க வேண்டிய அறிவியல் தொழில் நுட்பம் வேலையை பறிக்க துவங்கியது. இதைக் கண்ட காரணத்தால், அறிவியல் தொழில் நுட்பமும், தொழில்மயமும் எங்கள் மக்கள் வேலை வாய்ப்போடு இனைந்திருக்க வேண்டும் என மேற்கு வங்க அரசு கோரியது. விஞ்ஞான ஏகாதிபத்தியத்தி ற்கு எதிராக போராட்டம் நடத்தியது. அதன் மாற்றத்திற்கு காத்திருந்தது. ஆனால் மேற்கு வங்க அரசு எடுத்த மக்கள் நல நடவடிக்கையால் நிலத்தை இழந்த நில பிரபுகளும், நிலத்தை மூலதனமாய் வைத்திருந்த பெரு முதலாளிகளும் காத்திருக்க தயாரில்லை. மம்தா என்ற வடிவத்திலும், கூலிக்கு அடகு போகும் அறை வேக்காட்டு தத்துவவாதிகளையு ம் மேற்கு வங்க அரசுக்கு எதிராக தயார் செய்தனர்.
அதன் பின் எழுந்த கோஷ்ம்தான்.... நிலம் கொடுத்தீரக்ள். விவசாயம் மட்டும் இருக்கிறது. தொழில்வளம் பெருகவில்லை என மம்தா கொடுத்த குரல்.
நடந்த பேச்சு வார்த்தையில் சிறப்பு பொருளாத்தார மண்டலங்களை போல் இல்லாமல், மாநில அரசின் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்ட... தனது சந்தை விஸ்தரிப்புக்கா க அலைந்த.. குறைந்த லாபம் கிடைத்தால் போதும் இந்தியாயின் அனைத்து பெருநகரங்களிலும ் தொழிற்சாலை இருப்பதை காட்டிக்கொள்ள அலைந்த.. டாடா நானோ கார் தொழிற்சாலை துவங்க அனுமதி அளிக்கப்பட்டது. இதை பொறுத்துக்கொள்ள முடியாத முதலாளித்துவ வர்க்கம் தனது கைக்கூலிகளை ஏவியது. அந்தக் கூலிப் பட்டாளம் மக்களிடம் தவரான வித்துக்களை விதைத்து முடிந்த அளவு உயிர்களை அறுவடை செய்தன. அரசியல் லாபம் அடைந்தன.
இதுவே அமெரிக்க முதலாளிகள் மூலதனம் போட்டிருருந்தால ் என்னவாகியிருக்க ும். மம்தா மற்றும் மம்தாவோயிஸ்டுகள ் பாதுகாப்பு கொடுத்திருப்பார ்கள். இது உண்மையா என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். உதாரணம் ஆயிரம் இருக்கிறது. இரண்டுமட்டும் இப்போது.
1. மத்திய அரசு உதவியுடன் பல ஏக்கர் நிலங்களை கையில் வைத்திருக்கும் காங்கிரஸ் மற்றும் மம்தா காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுக்கு இதுவரை சிறு கீரல் கூட ஏன் விழவில்லை?
2. உத்திர பிரதேசம், பீகார் மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் மம்தாயிஸ்டுகள் மன்னிக்கவும் மாவோயிஸ்டுகள் வைக்கும் "புரட்சிகர" குண்டுகளுக்கு அப்பாவி மக்கள் மட்டும் ஏன் பலியாகின்றனர்?
நன்றி! வணக்கம்!! மீண்டும் சந்திப்போம்!!!! !
Report to administrator
0 #9 mani 2009-11-02 09:48
1. உங்க தலைவர்களுக்கு கீரல் விழுந்த்து போலீசாலா, மக்களாலா?

2. அப்பாவிகள்னா யாரு, உங்க கட்சி சார்பா விதர்பா விவசாயி வீட்டுப் பெண்களை பாலியல வல்லுறவு செய்ய அனுப்ப பட்டார்களே அவர்களா..
Report to administrator

Add comment


Security code
Refresh