tree paintingநிலைக் காலுக்காக

நானே வெட்டினேன்...

நானே

புல்வெளிகளைப்

பொழுதுபோக்கு

மைதானமாக்கினேன்...

நானே பணப்பயிர்களுக்கு

பச்சை வயல்களை

பாலையாக்கினேன்

நானே

உப்புப் பண்ணைகளை

ஊருக்குள் நிறுவி

பன்னாட்டுப் பாசனத்தை

விதையாக்கினேன்

நானே

அந்நிய மோகத்திலும்

கண்ணிய மதப் பற்றிலும்

வாழ்வாதாரத்தைத்

தொலைத்து நின்றேன்

நானே

அனைத்திற்கும்

காரணமானவன் என

நான் அறியும்போது

நானே இருக்கப் போவதில்லை.