பசுமைப் புரட்சியின் கதை

கேள்வி: 1950&60 ஆண்டுகாலப் பகுதிகளில் ரசாயன உரம் பயன்படுத்தாமல் 1400&1500 கிலோ நெல் மகசூல் எடுத்தார்கள்.

கேள்வி: தொழுஉரத்தில் தழைசத்து மட்டுமின்றி மணி, சாம்பல் மற்றும் நுண்ணூட்டச் சத்துக்களும் அடங்கியுள்ளன.

பதில்: நவீன வேளாண்மையைச் சிபாரிசு செய்யும் யாரும் தொழு உரத்தை இட வேண்டாம் என்று சொல்வதில்லை. ரசான உரத்தோடு தொழு உரத்தையும் சேர்த்து இட வேண்டும் என்றுதான் சொல்கிறார்கள். தொழு உரத்தில் மாட்டுச் சாணம்தான் முதன்மையானது. 1970களில் 30 முதல் 35 சதவீதம் சமையல் செய்ய வரட்டியாக விறகுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்பட்டது. 1990களில் இதன் உபயோகம் வரட்டியாக 75% உயர்ந்துள்ளது. ... 3600 கிலோ தொழு உரம் நெல் சாகுபடி செய்ய எங்கே போவது.?

கேள்வி: தழை உரத்திற்காக்க் கொழுஞ்சி, தக்கைப் பூண்டு போன்றவை வயல்களில் வளர்த்து பயன்படுத்துவதுண்டு.

பதில்: கொழுஞ்சி மற்றும் தக்கைப்பூண்டு விதைத்து 60 முதல் 70 நாள்கள் வளர்ந்து அப்படியே நிலத்தில் மடித்துப் பயன்படுத்த வேண்டும். உதாரணமாகத் தஞ்சை மாவட்டத்தில் வழக்கமாகப் போதுமான தண்ணீர் திறந்து விடப்படும். அதன் பிறகு நெல் நாற்று விட்டுச் சாகுபடி செய்தால் அக்டோபரில் அறுவடைக்கு வரும். விவசாயிகள் உடனே இரண்டாவது தாளடி பருவ நெல் சாகுபடி செய்வார்கள். இப்படியான நிலையில் கொழுஞ்சி, தக்கைப்பூண்டு சாகுபடி செய்து நிலத்தில் பயன்படுத்துவது எங்ஙனம் சாத்தியம்.?

பாரம்பரிய விதை நோய் எதிர்ப்புச் சக்தி கொண்டிருந்தது என்கிறார்கள். 5 மாதம் காத்திருந்து வெறும் 500 கிலோ நெல் உற்பத்தி பெறுவதில் நோய் எதிர்ப்பு சக்தி இருந்து என்ன பயன்.?.... இன்று நம் நாட்டில் உற்பத்தி செய்யும்

ரசாயன உர நிறுவனங்கள் பெரும்பாலும் பொதுத்துறை, மற்றும் கூட்டுறவுத் துறையின் கீழ் மத்திய மாநில அரசுகளுக்குச் சொந்தமாக இருக்கின்றன. ... ஒவ்வொரு ரசான உரத்தையும் மத்திய அரசு நிர்ணயித்த விலையில்தான் விற்க வேண்டும். ....இந்த இயற்கை வேளாண்மை என்பது ஒரு மேட்டுக்குடி மனப்பான்மை கொண்டதாகும்.

.. கோவையில் 2003 2004இல் நடத்தப்பட்ட சுற்றுப்புறச் சூழல் பற்றிய ஆய்வறிக்கை, நிலத்தடி நீரில் கனிமக் கரைசலின் அளவு ஒரு லிட்டருக்கு 2000 மில்லி கிராம் இருப்பதைக் காட்டியது. குடிநீரில் கனிமக்கரைசல் ஒரு லிட்டருக்கு 500 மில்லிகிராமுக்கும் குறைவாக இருக்க வேண்டும். மிஞ்சினால் நீரைப்பருக முடியாது; உப்புநீராகிவிடும். துணிகளைத் துவைக்கக்கூட இயலாது.     

நீர்ப்பாசன முறைகளை ஏற்படுத்துதல் தங்கள் அனுபவம் காரணமாக அதில் படிப்படியான அதிகபயன்பாடுகளுக்காக அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து சிந்தித்தல் முதலியன நமது சமூகத்தில் நடந்துள்ளதன் அறிகுறிகளை பலயிடங்களில் நீர்ப்பாசன அமைப்புகளில் காணக்கிடைக்கிறது. ஆறுகளில் தடுப்பணைக்கட்டி பாசனக்கால்கள் அமைத்ததில், வெள்ளவரத்துக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள முக்கியத்துவம் வியக்க வைக்கிறது. 5 அல்லது 10 வருடங்களுக்கு ஒரு தடவை ஏற்படும் பெருவெள்ளங்களுக்காக பாசனக்கால்களையே வெள்ளக்கால்களாக அவர்கள் உருவாக்கியுள்ள நுட்பம் ஆங்கிலப் படிப்புக்குத் தெரியாது. பலயிடங்களில் பாசனக்கால்களில் ஆறுகள் விழுந்து சென்றாலும் மணல் வாரிகள் மூலமாக பாசனக்கால்கள் பழுதுபடாதபடியும், மணலால் கால்வாய் மூடிவிடாமலும் அமைத்துள்ளது மிகச் சிறப்பானது. இது போதாது என்று இப்பாசனப் பரப்பிற்குத் தேவையான நாற்று பாசனத்திற்கு தேவையான நாழிக் கிணறுகளையும் அமைத்துள்ளனர்.

இவ்வளவு வாய்ப்பு வசதிகளையும் நம் முன்னோர்கள் நமக்களித்து விட்டு சென்றுள்ளனர். இது காணாது என்று வெள்ளையர் காலத்தில் தாமிர பரணியில், பாபநாசம் காவேரியில், மேட்டூர் நீர்த்தேக்கங்கள் வேறு. 1952 பிறகு தமிழ் நாடு அரசு கட்டிய பல நீர்த்தேக்கங்கள் இவ்வளவும் இருந்தும் அறுக்க மாட்டாதவன் இடுப்பில் ஐம்பத்தியிரண்டு கருக்கருவாள் நம்மால் இன்று ஒழுங்காக விவசாயம் செய்ய முடியாமைக்கு என்ன காரணம்? அது காவேரி பாசன வெள்ளாமையாக இருந்தாலும் சரி, தாமிர வருணிப் பாசன வெள்ளா மையாக இருந்தாலும் சரி ஏன் இந்த நிலமை? நம் முன்னோர்களின் சொத்தை அடைவதில் காட்டிய வேகத்தை, அவர்களின் வேளாண்மை சார்ந்த அறிவை பெறுவதில் காட்டவில்லை. நமக்கு அளிக்கப்பட்ட ஆங்கில அறிவு நம் முன்னோர்களுக்கு எந்த அறிவும் கிடையாது என்பதுபோன்ற எண்ணத்தையே ஏற்படுத்தியுள்ளது.

காவேரி பாசன விவசாயமானாலும் தாமிரவருணி பாசன விவசாயமானாலும் பாதிப்பில் பெரிய வித்தியாசமில்லை. வெள்ளையர் காலத்தில் ஜுன் 10 தேதியில் காவேரி பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதைப் போலவே தாமிரவருணியிலும் இதுபோலவே நடந்தது. இதை அனுசரித்து நாற்று பாவப்பட்டது. ஆங்கிலத் தேதிகளை சொல்வதற்கு பதிலாக.

தாமிரபரணி விவசாயிகள் வைகாசி விசாகம் முடிந்ததும் நாற்று பாவியதாகவும் அரசு தண்ணீர் விடும்போது தொழி கலக்கி நடுவதற்கும் சரியாக இருக்கும். தண்ணீர் அணையில் முன்பின்னாக இருந்தாலும் விளைந்து விடும்.

தற்போது ( 90களில்) தண்ணீர் திறந்துவிடும் தேதிகள் உறுதியாக தெரியாததால் தண்ணீர் திறந்த பிறகுதான் நாற்றே விடுகிறோம். இதனால் தண்ணீர் செலவும் அதிகம். தேதி நிச்சயமற்றதால் ஏற்படும் துயரங்கள் வருமாறு;

அமெரிக்காவும் உலக விவசாயமும்.

முதல் உலகப்போர் முடிவில் அமெரிக்கா தனது உணவுக் கோட்பாட்டை வரையறுத்தது. உலகில் ஆங்கிலோ சாக்சன் மக்கள் வசம் உள்ள அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூபவுண்ட்லாண்ட் முதலிய நாடுகள் மூலமாக விளையும் உணவால் மொத்த உலகத்திற்கும் ரஷ்யா, சீனா நீங்கலாக உணவு வழங்கலாம் என்பதே. உணவையே ஒர் ஆயுதமாக பயன்படுத்தலாம் என்பதே அக்கோட்பாட்டின் மையக் கருத்து.

போரினால் ஐரோப்பிய பொருளாதாரம் சீர்குலைந்து விட்டதால் அதை மறு சீரமைப்பிற்கு கடனுதவி அளிக்க அமெரிக்கா முன்வந்தபோது அவர்கள் பணவுதவியுடன் கோதுமையையும் வாங்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தனர்.

அந்த நிபந்தனைக்குக்குப் பின்னால் உள்ள ஆபத்தை உணர்ந்த ஐரோப்பியர்கள் அன்று முதல் தங்கள் நாட்டு விவசாயிகளுக்கு தாராளமாக மானியங்கள் அளித்து. முடிந்த வரை தங்களின் உணவுத் தேவைகளை பூர்த்தி செய்கிறது. இன்று வரையும் இதுதான் நிலைமை. பசுமை புரட்சி போன்ற எந்த படுகுழியிலும் அவர்கள் விழாமல் தங்களைக் காத்துக் கொண்டனர்.

கோமதிநாயகம் 1 லட்மணன் கிருஷ்ணமூர்த்தி பூச்சிமருந்து விற்பனை பற்றி.

முதல் ஆந்திர விவசாயிகள் பூச்சிமருந்து மரணம் ஆன வருடம் பற்றி.

டீசல் எனஜீனில் சாண எரிவாயு பயன்படுத்தியது பற்றி.

உதிரித் தகவல்கள்.

பசுமை விகடன். ஜனவரி 10 2009. வேளாண் துறையே நடத்திய விதை மோசடி?. .... திருவாரூர் மாவட்டம். வீரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பிரேம்நாத் இதைப்பற்றி குமுறுகிறார். சம்பா பருவத்துக்கு கோ.43,ஏ.டீ.டி.38, சி.ஆர்.1009.

இந்த ரகங்களைத்தான் வழக்கமா விதைப்போம். இது எல்லாமே 135 நாட்களுக்கு மேல் வயசுள்ள ரகம். சம்பா பருவத்துல மழை, குளிர்னு இருக்கும். அதுக்கு உகந்தது இந்த ரகங்கள்தான். இந்தத் தடவை வேளாண் விரிவாக்க மைய விதை கிடங்குல, இதுல எந்த ரகமும் இல்லைனு சொல்லிட்டாங்க. அதோடு அவங்க விட்டிருந்தா... பிரச்னை வந்தி ருக்காது. கோ.43 மாதிரியே சம்பாவுக்கு ஏத்த புது ரகம் இருக்கு. பேரு எம்.டி.யு.1010. சுமார் 140 நாள் வயசுடையதுனு அதிகாரிங்க சொன்னதால, அந்த ரகத்தை வாங்கினோம்.

 ... எம்.டி.யு.1010 ரகத்தையும் அதிகாரங்க பேச்சை நம்பி வாங்கிட்டு வந்தோம். ஆனா, 60 நாள்லயே, அதாவது பயிரோட உயரம் அரை அடி இருக்குறப்பவே கதிர் வந்துடிச்சி. பெருபாலும் பதராகவே இருந்துச்சி. ஏக்கருக்கு 10 மூட்டை கூட தேறாதுனு தெரிஞ்சி நொந்துட்டோம். இதுமாதிரி பிரச்னை வரும்னு அதிகாரிகளுக்கு தெரிஞ்சிருக்கு அதனாலதான், விதைக்கான ரசீதை பலருக்கும் அவங்க தரல. அப்புறமா தாறதா சொன்னாங்க. கடைசி வரை கொடுக் கவே இல்ல. திட்டமிட்டேதான் தவறு செஞ்சாங்க. இந்த அநியாயம் எங்காவது உண்டா..!

... அரசாங்க டெப்போவுல விதை வாங்கினா தரமா இருக்கும். கலப்பு இருக்காது, வேற பிரச்னையும் வராதுனு நம்பித் தான் வாங்கினோம்.இது ஆந்திரா மாநிலம் ஹைதராபாத்துல இருந்து வந்திருக்கு. தேசிய விதைக் கழகம் தயாரிச்ச ரகம். அதிக விளைச்சல் தரும்னு அதிகாரிங்க சொன்னாங்க. கடைசில மோசம் போயிட்டோம். தனியார் வியாபாரிங்கதான் புளுகு மூட்டையை அவுத்துவிட்டு, கண்டகண்ட விதைகளையும் தலையில கட்டிடு போவாங்க. இப்ப, வேளாண் துறை அதிகாரிகளே மோசடியில் இறங்கிட்டாங்களே... மங்கலம் விவசாயி செல்லபாப்பா.

ராமமூர்த்தி சாமிநாதன் பற்றி என்ன தெரியும். பருத்தியில் அதிக தகவல்கள். கிளாட் ஆல்வாரிஸ் பற்றி... முதலியன.

பருத்திபூத்து காய்க்காத்து பற்றி.

சித்த மருந்துகளுக்கும் ஆயுர்வேத மருந்துகளுக்கும் என்ன வித்தியாசம் உள்ளது?.                இறையடியான், சேலம்    கதிர் 20.06.2004

லோகா சமஸ்தா சுகினோ பவந்து உலக மக்கள் அனைவரும் இன்புற்றிருக்க வேண்டும் என்ற ஓர் உயர்ந்த எண்ணத்தை மட்டுமே கொண்டிருந்த மகான்களான முனிவர்களால் எழுதப்பட்ட மருத்துவமுறைகள்தான் சித்தமும் ஆயுர் வேதமும். பூத உடலை ஜீவாத்துமா அணிந்து கொண்டிருப்பதன் லட்சியம் அறம் பொருள் இன்பம் வீடு (மோட்சம்) ஆகியவற்றை பெறுவதற்காகத்தான். இந்த நான்கிற்கும் இடையூறு விளைவிக்கின்ற நோய்களால் மக்கள் துன்புற்றிருக்க அதைக்கண்டு வருந்திய முனிவர்கள் மூலிகைகளை முக்கியமாக்க் கொண்டு நோய்தீர்க்கும் மருந்துகளை நமக்கு உபதேசித்தனர். எத்தனை யுகங்கள் வந்தாலும் ஆதியும் அந்தமுமில்லாத இந்த சித்த ஆயுர் வேதம் என்னும் அமுதத்தை தன்னலம் ஏதுமின்றி மக்களின் மேன்மைக்காக நமக்கு எடுத்துரைத்த முனிவர்களுக்கு நாம் என்றென்றும் நனிறிக் கடன் பட்டிருக்கிறோம். இந்த இரு வைத்திய முறைகளுமே சாதாரண மனிதர்களால் இயற்றப்படாததால் இவை இரண்டுமே மிகச் சிறந்த மருத்துவ முறைகள்தான் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை.

 நமக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இப்பூச்சிமருந்துகள் பொதுவாக இரண்டுவழிகளில் செயல்படுகிறது. கரைசல்களாக இம்மருந்துகளைத் தெளிக்கும் போது பூச்சிகளின் நரம்பு மண்டலத்தை சீர்குலைப்பதன் மூலமாக அப்பூச்சிகளை அழிப்பது. அடுத்தவழி செடிகளின் எந்தவொரு பகுதியில் இப்பூச்சி மருந்து பட்டாலும் செடிமுழுவதும் பரவிவிடும். பூச்சிகளின் உடலில் இந்நஞ்சு கொஞ்சம் கொஞ்சமாக ஏறி பூச்சிகள் சாகும். ஆரம்ப ஐரோப்பிய முறைகளும் தற்போது நம்தலையில் சுமத்தியிருப்பதும் இம்முறைகளே. இப்பசுமைப் புரட்சிக்கு முன்னால் நம்நாட்டு விவசாயத்தை பூச்சிகள் தாக்கவில்லையா? தாக்கியது. 1980 களுக்குப்பின் சொல்கிறார்களே பொருளாதாரச் சேதம் இதற்கு உள்பட்டும் இதைமீறியும் சேதங்கள் ஏற்பட்டுள்ளது. தங்களது மரபுவழி முறைகளால் இச்சேதாரங்களை தவிர்த்துள்ளனர். அம் மரபு முறைகள் வருமாறு;

நன்மை செய்யும் பூச்சிகளை 1980 களில் இவர்கள் சொன்னது போலவே அதேகாலத்தில்தான் தீமை செய்யும் பூச்சிகளை அழிக்க வேறுவகை பூச்சிகளை பயன் படுத்தலாம் என்றும் கூறினர். ஆனால் இன்றுவரை நிலம் நுண்ணுயிர்களை இழந்துவிட்டது என்பதை மறந்தும் சொல் வதில்லை. நிலம் எதனால் இப்படி ஆனது, ரசாயன உரங்கள் மேலும் மேலும் இச்சீர்கேட்டைத்தான் செய்யும். அதனால் ரசாயன உரங்களைத் தவிற்க வேண்டுமென இப்போதும் சொல்ல அவர்கள் தயாராக இல்லை. Indensive Cultivation என்ற பொய்யை பொய்யென்று அறிந்தும் கூசாமல் சொன்னவர்கள். இன்றும் இவர்கள் ரசாயன உரங்கள் எவ்வளவு என்ன வீதத்தில் போடவேண்டும் என எந்த குற்ற வுணர்வும் இல்லாமல் சொல்வதும் அச்சிட்டு கொடுப்பதும் முறையாக நடக்கிறது.

தொல்காப்பியம் முதல்பொருளாக குறிப்பிடுவதும் நிலம்தான் அவர்கள் முதலில் கைவைத்ததும் நிலத்தில்தான். பலநூறுவருடங்களாக நாம் விவசாயம் செய்துவந்த இந்நிலங்கள் நுண்ணுயிர்கள் நிரம்பிய உயிர்த்துடிப்புள்ள நிலமாக இருந்தது. அதனால்தான் டிராக்டர்கள் வந்த ஆரம்ப வருடங்களில் இத்தீருவாச நிலங்களில் உழுவதற்கு இறக்கி விட்டபோது கொஞ்சம கொஞ்சமாக அமிழ்ந்தது. கயிறுகள் கட்டி வேறு டிராக்டர்களை கொண்டுவந்து இழுத்து கரைசேர்த்தார்கள். இதே வயல்களை 3 அல்லது 4 வருடங்களில் நுண்ணுயிர்கள் இழப்பினால் இதே டிராக்டர்கள் சர்வசாதார ணமாக உழுத்தைப்பார்க்க முடிந்தது சில சம்சாரிகள் சிலவயல்களைக் காட்டி பெருமைபொங்க கூறியது;. இந்த வயல்களில் மாடுகளால் உழமுடியாது. இதற்காகவே நாங்கள் எருமைக்கடாக்களை வைத்திருந்தோம். நாங்கள் பார்த்துக் கொண்டிருந்த அவ் வயல்கள் பாறைகளுக்குச் சமமாக இருந்தது.         

திரு. ராஜு ரெட்டியாரும் நானும்பேசிக்கொண்ட காலத்தில் எனக்கு இதைப்பற்றி ஒன்றும் தெரியாது. நானும் என் பங்கிற்கு இந்த ரசாயனங்களை என் தமக்கையார் நிலத்தில் அள்ளி வீசியிருக்கிறேன். கணக்கன் ஷி.ஷி. நாகராஜன் முதலியோர்களின் எழுத்து மயக்கத்தை கலைத்தது ராமமூர்த்தி. அவர் எனக்கு அறிமுகம் செய்ததே One Straw  Revolution. ஒற்றை வைக்கோல் புரட்சி 10&15 வயதில் நான் பார்த்த கிராமத்தை என்முன் நிறுத்தியது. சிறுசிறு வெளியீடுகளாக பசுமைப்புரட்சி குறித்த யதார்த்த செய்திகள். அபரிதமான விளைச்சலை என்ன செய்தார்கள் எனப் பார்கப்போனால் அந்த விளைச்சல் கண்டது பல வருடங்களுக்கு முன்பு. அன்றே அந்த அதிக விளைச்சலும் அதிக ரசாயன உரமும் பூச்சி மருந்து கிரயமும் சரியாபோச்சு என்ற உண்மை. எந்த மாதிரியான உலகத்தில் இருக்கிறோம் எனக்காட்டியது. ஆனால் அப்போதும் மாதத்திற்கு ஒரு தடவையாவது அதிக மகசூலுக்கு இந்த ரசாயன உரங்கள் பூச்சிகொல்லிகள் என ஒருகட்டுரையை தினமணியில் பார்க்கலாம். மக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக மக்களின் வரிப்பணத்தில் சலுகை விலையில் வாங்குபவர்களும் மக்களே அதாவது வாழ்வளிப்பவர்களும் மக்களே

காகிதம் வாங்கி அந்த மக்களுக்கு அவர்கள் இந்த மாதிரியான செய்திகளைத்தான் கொடுத்தார்கள். இந்த சந்தர்ப்பத்தில் 1960 களில்குமுதத்தில் படித்தது வெளிநாட்டில் மனைவியர் தம் கணவர்களிடம் தாங்கள் செய்யும் தங்கள் வீட்டு வேலைகளுக்குச் சம்பளம் கேட்பதாக பெண்ணியம் பேசியவர்களை இதைவிட மோசமாக கேவலப்படுத்த முடியாது. இதிலிருந்து தெரிவது என்னவென்றால் நமது ரத்ததை குடித்து விட்டு நமது முகத்திலேயே குத்தும் பத்திரிகைகள்தான் நம்நாட்டு தேசப்பற்றுள்ள பத்திரிகைகளாக நம்மால் இந்த பத்திரிகைகள் முத்திரைக் குத்தப்பட்டு உள்ளது. இது நமது அறியாமையின் அளவைக்காட்டுகிறதோ...

நம்நாட்டு விவசாயிகளுக்கு இப்புதிய ரசாயனங் களும் பூச்சிக் கொல்லிகளும் நிலத்தில் எப்படி செயல்படுமென்று தெரியாது. நுண்ணுயிர்களும் நுண்ணுயிர்களை பெருக்க உதவும் மண்புழுக்களும் நிறைந்த நம் மண்வளத்தையும் அவ்விவசாயிகளின் கைகளைக்கொண்டே அணுஅணுவாகக் கொன்றதை அவ்விவசாயிகள் அறியவில்லை. அவர்களுக்குத் தெரியாது. ஆனால் இவ்வேளாண் விஞ்ஞானி களுக்கும் அவர்களுக்கு மேலே இருந்த எம்.எஸ்.சாமிநாதனுக்கும் இவ்விபரங்கள் மிகநன்றாகவே தெரியும். என்ன 4 வருடமாகுமா அல்லது 5 வருடமாகுமா என்பதில் சந்தேக மிருக்கலாம். எப்படி எப்படி இந்நுண்ணுயிர்கள் சாகும் என்பது சாமிநாதனுக்கு மிகமிகத் தெளிவாகத் தெரியும்.

(தொடரும்)

Pin It