இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 65 குழந்தைகள் நாம் வாழும் பூவுலகை இன்னும் சிறந்ததாக மாற்ற சிந்தித்தார்கள். எதிர்காலத்தில் இந்த பூமிப்பந்து எப்படி யிருக்க வேண்டும்? அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தார்கள். தற்போது உள்ள அமைப்பை மாற்றுவதற்குத் தேவையான தனிநபர் செயல்பாடுகள், அரசு மேற்கொள்ள வேண்டிய மாற்றங்களை பட்டியலிட் டார்கள். இரண்டும் ஒரே நேரத்தில் நிகழ வேண்டு மென நினைத்தார்கள்.

நமது எதிர்காலம் சிறப்பாக இருக்க கீழ்க்கண்ட கூற்றுகளை படித்து, அந்த கருத்துகளின் அடிப் படையில் வாழ முயற்சிப்போம். நமது எதிர்காலம் தூய்மையாக, அமைதியாக இருக்க நமது குழந்தைகள் வகுத்த திட்டம் இது. இந்த இயக்கத்தில் சேர்ந்து, நாமும் இந்த உலகை மாற்றுவோம்.

நமது எதிர்கால உலகம் எப்படியிருக்க வேண்டும்? நமது குழந்தைகளின் கனவு:

1. மக்கக்கூடிய, மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

2. பொறுப்பு உணர்வுள்ள தலைவர்கள் வேண்டும்.

3. மாற்று எரிசக்தி: சாண எரிவாயு, சூரியசக்தி, காற்றுஆற்றல், அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு வேண்டும். மாசுபடுத்தாத வாகனங்கள், அணுஆற்றல் வேண்டாம்.

4. கல்வியும் விழிப்புணர்வும்: கிராம-நகர்ப்புற கலந்துறவு, முறைசாராக் கல்வி (பாரம்பரிய அறிவு, சூழல் பயிலரங்கு, மக்கள்தொகை கட்டுப்பாடு, இயற்கையுடன் தொடர்பு, பாரம்பரிய மருத்துவ பயன்பாடு)

5. தூய்மையான உலகம்: வேதிப்பொருள் குறைவு, இயற்கை வேளாண் உணவு, பாரம்பரிய மருத்துவம், மாசுபாட்டை குறைப்பது, கதிரியக்கத் தடை, ஒலி மாசை குறைப்பது

6. தண்ணீர்: தூய்மையான நதிகள், மழைநீர் சேகரிப்பு தேவை, தண்ணீரை வீணாக்கினால் தண்டனை, அபராதம்

7. தேவைப்படுபவர்களுக்கு சேவை: குழந்தை தொழிலாளர் முறை தடுப்பு, வறுமை ஒழிப்பு

8. இயற்கை பாதுகாப்பு: மரம் நடுதல், மரங்களை காத்தல், சரணாலயங்களை காப்பாற்றுதல், இழந்த இயற்கையை காப்பாற்ற புதிய தோட்டங்கள்

9. அமைதி: சகிப்புத்தன்மை, பண்பாட்டு பன்மை, கூட்டுறவு, மனநோய் தடுப்பு, போரில்லா உலகம், கருணையை பரவலாக்குதல்.

Pin It