இயற்கை வழியில் ஆரோக்கிய வாழ்வு எனும் தாரக மந்திரத்தை அடிப்படையாக கொண்டு மண்ணின் வளம், மக்களின் நலம், சுகமான சுற்றுச்சூழல் இவைகளின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக இந்திய கப்பல் கழகத்தில் இளநிலை கப்பல் பொறியாளர் பதவியை உதவிறிட்டு தி நேச்சுரல் ஸ்டோர் எனும் இயற்கை அங்காடியை நடத்தி வருகிறார் ரூசோ.

சிவகங்கை மாவட்டத்தில் முத்துப்பட்டி எனும் கிராமத்தில் இருபது ஆண்டுகளாக இயற்கை விவசாயம் செய்து வரும் திரு.தைனிஸ் அவர்கள் மற்றும் அவரது மகன் திருமதி ராஜரீகா மற்றும் இயற்கை தேனீப்பண்ணை நடத்தி வரும் திருமதி ஜோஸ்பின் அவர்களுக்கு அடுத்தபடியாக திரு.ரூசோ இயற்கை வேளாண் விளைபொருட்களை விற்பனை செய்யும் இயற்கை அங்காடியைச் சென்னையில் நடத்தி வருகிறார்.

இந்த இயற்கை அங்காடியை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதற்காக பல்வேறு விழிப்புணர்வு கருத்தரங்கம், மரம் நடுவிழா, இயற்கை விவசாயப் பயிற்சிகள், தேனீ வளர்ப்பு பயிற்சிகள், வீட்டிற்கு டோர் டெலிவரி, இணைய தள சந்தை, போன்ற பல்வேறு வசதிகளையும், வாங்குவதற்கான ஆர்வத்தையும் உருவாக்கி வருகிறார்.

மேலும் நகர மக்களிடையே வீட்டு காய்கறித் தோட்டம், மொட்டை மாடித் தோட்டம், இயற்கையான முறையில் தோட்ட பராமரிப்பு, ஆகியவற்றையும் செய்து வருகிறார். இதன் மூலம் மக்களுக்கு ஒரு பசுமையான பொழுது போக்கும், ஆரோக்கியமான உடற்பயிற்சியும், கிடைக்கும். மேலும் காலமும், சிறிதளவு பணமும் மிச்சமாகும். அதோடு மட்டும் இல்லாமல் விவசாயம் செய்யும் முறைகளையும், அதில் உள்ள சிரமங்களையும் கற்றுக் கொள்ளலாம். அதோடு நமக்குத் தேவையான காய்கறிகளை நமக்கு அருகிலேயே கிடைக்க செய்யலாம். சென்னையை சுற்றி ஒரு பசுமை வளையத்தை உருவாக்க முயற்சி செய்து வருகிறார்.

இயற்கை ஆர்வலர்களுக்கு மற்றும் சுற்று சூழல் விரும்பிகளுக்கு, சுற்றுலா செல்வதற்காக இயற்கை சுற்றுலா மற்றும் விவசாயச் சுற்றுலா ஆகியவற்றை நடத்தி வருகிறார். இந்தச் சுற்றுலாவில் சுற்றுச் சூழலை கற்றுத் தரவும் இயற்கையை இனிமையாக நேசிக்கவும் இந்த சுற்றுலாக்கள் இன்றைய அவசர உலகத்திற்கு ஒரு மாற்றாக நிச்சயமாக அமையும். இன்றைய நெருக்கடியான போக்குவரத்து மற்றும், புகை, மனஅழுத்தம் ஆகியவற்றில் இருந்து விடுபட்டு ஒரு தனிமையான பசுமை மழைக்காடுகள் நிறைந்த அருமையான நீர் வீழ்ச்சிகள் நிறைந்த எழில் கொஞ்சும் வயல்வெளிகள் கொண்ட பகுதிகளில் நம்மையும் நம் மனதையும் தொலைத்து வர எவரும் செய்து வராத புதுமையான சுற்றுச்சூழல் சுற்றலாக்களையும் அறிமுகப்படுத்தி வருகிறார்.

இயற்கை அங்காடியின் விற்பனை மையங்களை பல இளம் தொழில் முனைவோரும், சுற்றுசூழல் ஆர்வலர்களும் தொடங்க விருப்பம் தெரிவித்துள்ளனர். எனவே அவர்களுக்கு தகுந்த ஆலோசனையும், உதவிகளையும் ரூசோவின் நிறுவனம் செய்து வருகிறது. தி நேச்சுரல் ஸ்டோரின் Franchisee எடுத்து செய்து வர விருப்பமுள்ளவர்களை ஊக்கப்படுத்துகிறார்கள். மிகக்குறைந்த முதலீட்டில் இந்த இயற்கை அங்காடியை திறக்கலாம். வீட்டில் வைத்தும் பெண்கள் இதை நடத்தலாம். சிறிது, சிறிதாக இந்த இயற்கை வேளாண் விளை பொருட்கள் மக்களை சென்றடையும். இயற்கை விவசாயிகளையும், சுற்றுசூழலையும் மண்ணையும் மக்கள் நலத்தை காப்பதிலும் நம்முடைய இந்த சிறிய பங்களிப்பு நாளைக்கு மிகப்பெரிய ஒரு தொடர் சந்தையாக மாற வாய்ப்பு காத்திருக்கிறது என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் ரூசோ.

தை.ரூசோ, 9626471727, 9865943703