கூடங்குளம் மக்கள் போராட்டத்தினால் இந்திய அரசு கதிகலங்கிப் போயிருக்கிறது. போராட்டம் பரவாமல் இருக்க, கல்பாக்கத்தில் அதிரடியாகவும், அடியாள் வைத்தும் போராட்டக்காரர்களை மிரட்ட ஆரம்பித்துள்ளது. கல்பாக்கத்தின் மருத்துவர் புகழேந்தி, காவல்துறை ஆய்வாளரால் சமீபத்தில் மிரட்டப்பட்டுள்ளார். தமிழ் சினிமா பாதிப்பில் என்கவுன்டர் என்றால் என்னவென்று தெரியுமா? என்றும் வசனம் பேசியுள்ளார். இதுகுறித்து விளக்கம் கேட்க கல்பாக்கம் சென்றிருந்தோம். புகழேந்தியிடம் பேசி முடித்தபிறகு, கதிர்வீச்சினால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தோம். அது ஒரு பயங்கரம்! கல்பாக்கம் யுத்த களத்தைப் போல் உள்ளது. மக்கள் நீக்கமற தைராய்டு, புற்றுநோய் போன்றவற்றினால் கடுமையான பாதிப்படைந்திருப்பதை நேரில் பார்க்கும்போது கொடூரமாக உள்ளது. அதிலும் புகைப்படங்கள் எடுக்கும்போது நிற்கக்கூட முடியாமல் மக்கள் சரிந்து விழுந்தார்கள். மருத்துவர் புகழேந்தி, தொடர்ச்சியாக வார்த்தைகளில் விவரித்திருப்பதை நேரில் காணும்போது கூடங்குளம் போராட்டத்தை இன்னும் வீரியமாக்க வேண்டும், நம்பாதவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்யலாம்.

 neutrino_3702011 போராட்டங்களின் ஆண்டாக தமிழகம் மாறியது. 2012லும் அது, தொடரப்போகிறது. ஈழ இனப் படுகொலைகள், தூக்குத்தண்டனைக்கு எதிரான போராட்டம், பரமக்குடி படுகொலைகள், முல்லைப் பெரியாறு ஆகியவற்றைத் தொடர்ந்து, மாபெரும் அளவில் நாம் முன்னெடுக்க வேண்டிய போராட்டம், தேனியின் நியூட்ரினோ ஆய்வக எதிர்ப்பாகும். இயற்கைக்கு ஆபத்து, வன விலங்குகளுக்கு இடையூறு என்று ஊட்டியில் அதை அமைக்க கூடாது என்று இயற்கை ஆர்வலர்கள் போராடினார்களோ அதே காரணம் தேனிக்கும் இருக்கிறதே.. நியூட்ரினோ ஆய்வகம் பூமிக்கு அடியில் இரண்டு கிலோமீட்டர் துளையிடபட்டு அங்கே அமைக்கபடுகிறது. அனைத்துலகக் காடுகள் ஆண்டில் காடுகளை அழிப்பதற்கான ஒப்புதலை அந்த அமைச்சகத் திலிருந்து ஏற்கனவே பெற்றுக்கொண்டுள்ளனர். இது இந்தியாவில் மட்டுமே நடைபெறும். முல்லைப் பெரியாறுக்கும் நியூட்ரினோவுக்கும் இருக்கும் தொடர்புகள் விரைவில் அம்பல மாகும். மீண்டும் தமிழர்கள் சோதனை எலிகளாக மாற்றப்பட்டுள்ளனர். 

 2012ல் ஜனவரிக்கான கூடங்குளம் அணுசக்திக்கெதிரான மக்கள் இயக்கத்தின் போராட்டங்களை உங்கள் டைரியில் குறித்துக் கொள்வதோடு, அதில் பங்கு பெறுங்கள்... 06ஆம் தேதி ராஜபாளையத்தில் ஊர்வலமும் பொதுக்கூட்டமும், 07 ஆம் தேதி, சி.பி.அய்.எம்.எல் நடத்தும் வாகன பேரணி திருநெல்வேலியிலிருந்து இடிந்தகரைவரை, 08ஆம் தேதி பாண்டிச்சேரியில் உண்ணாநிலைப் போராட்டம், 12ஆம் தேதி இடிந்தகரையில் போராட்டம் தொடங்கி 150வது நாள் ஆகிறது. இதையட்டி வாகனப் பேரணியும், போராட்டமும் ராதாபுரத்தில் நடைபெறுகிறது. 14ஆம் தேதி போகிப் பண்டிகையன்று குண்டு பல்பிலிருந்து சி.எப்.எல் பல்பிற்கு மாறும் நிகழ்வு நடைபெறும், 22 ஆம் தேதி திருச்செந்தூரில் போராட்டம், 25ஆம் தேதி தொடர் உண்ணாநிலைப் போராட்டத்தின் 100ஆம் நாள்., 26ஆம் தேதி குடியரசு தினத்தன்று பெருமணலில் இருந்து செட்டிக்குளம் வரை ஊர்வலமும் போராட்டமும், 30ஆம் தேதி காந்தி நினைவு நாளான்று இடிந்தகரையில் கூடங்குளம் அணு உலை மாதிரி எரிப்புப் போராட்டமும், ஒப்பாரியும்...

மாதிரி எரிப்பு உண்மையாக வேண்டும்...

Pin It