வல்ல நாட்டில் வசித்த திரு மாடசாமித் தேவர் - தலையாரியாகப் பணி புரிந்தவர் - பசுமைப் புரட்சியின் ஆரம்ப கட்டங்களில் வேலைப்பார்த்தவர் என்ற வகையில் தகவல்களைக் கேட்ட போது - சொன்ன தகவல்கள்; ஆரம்பத்தில் இந்த விதைகளையும் ரசாயன உரங்களையும் மக்கள் நம்பி பயன்படுத்த தயாராக இல்லை. அதனால் நாங்கள் ஏழை பாளையான சம்சாரிகளின் வயல்களில் யாருக்கும் தெரியாமல் ரசாயன உரங்களைப் போட்டதாகவும் ஒரு வாரத்தில் அப்பயிர்களின் திறச்சியைப் பார்த்தவர்களிடம் தாங்கள்தான் இதில் இந்த இந்த உரங்களைப் போட்டோம் என்று சொன்ன பிறகுதான் இந்தவகை உரங்களுக்கு கிராக்கி ஏற்பட்டது. புதிய வகை நெல்லை அறிமுகப் படுத்திய போது அந்த வயலில் உள்ள நெற்பயிர் ஒரே வளர்த்தியாக இருந்ததால் அதிமான கலவன்கள் இல்லை என்று சொன்னதாக வும் சொளகை வீசிக்காட்டி செயல் விளக்கம் தந்ததாகவும் சொன்னார். ஆரம்பத்தில் இச்சிறு விவசாயிகளைத் தான் இவ்விசப்பரிட்சையில் இறக்கிவிட்டனர். இவர்களின் விளைச்சலைப்பார்த்த பின்னர்தான் பெரிய விவசாயிகளும் துணிந்து இப்புதிய விதைகளை, ரசாயன உரங்களைப் பயன்படுத்தினார்கள்.

உண்மையிலேயே விளைச்சல் அபரிமிதமாகத் தான் இருந்தது. விளைச்சல் மயக்கத்தில் பூச்சி மருந்தடித்தல் அவர் களுக்குப் புதியதாக இருந்தாலும் கைத்தெளிப்பான்களை அவர்கள் பயன்படுத்தும்போது அவர்கள் உடல் நலனுக்கு ஏற்ப எப்படிச் செயல்படுவது என்பதையும் புகைப்பிடித்துக் கொண்டு *பூச்சிக்கொல்லியை தெளிக்கக் கூடாது என்ற ஆரம்ப பாடம் கூட அவர்களுக்குச் சொல்லித் தரப்பட வில்லை. கையுரைகள் இன்றி கைகளாலேயே அவற்றை கலக்கி அடிப்பது சர்வசதாரணம். உடனடியாக அவர்களுக்கு ஏதும் அசம்பாவிதம் -மேம் போக்காக பார்க்கும்படியாக ஏற்படாததால் இன்று வரையும் இதேக் கதைதான் நடக்கிறது.

ஓர் ஐரோப்பிய ஆய்வு; சுமார் 10 வருட காலம் இப்பூச்சிக் கொல்லிகளுடன் செயல்படுபவர்களுக்கு அவர்களது ஞி.ழி.கி. உடைவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாகச் சொன்னத் தகவலைச் சரிபார்ப்பதற்காக ஆழ்வார் குறிச்சி பரமகல்யாணி கல்லூரியில் உள்ள ஆசிரியர்கள் தேர்ந்தெடுத்த பகுதி, சங்கரன்கோவில் வட்டம். இப்பகுதியில் தொழில் முறை பூச்சுக்கொல்லி தெளிப்போர் தெளிப்பான்களுடன் உள்ளனர். ஆசிரியர்கள் மேற்கொண்ட ஆய்வில் அவர்கள் அதிர்ந்து போகுமளவுக்கு இத்தெளிப்பாளர்களின் ஞி.ழி.கி. உருக்குலைந்து கிடந்தது. பாவம் அத்தெளிப்பாளர்களுக்கு இதுபற்றி ஒன்றும் தெரியாமல் இருந்ததுதான் பெரிய கொடுமை.

இப்படிப்பட்ட வளமான மண்ணில்தான் இந்திய வேளாண் விஞ்ஞானி *திரு.ரிச்சாரியோவின் எச்சரிப்பையும் மீறித்தான் நமக்கு இந்த ஐ. ஆர். 8 நெல் விதைகள் இறக்குமதியானது. சொல்லிவைத்துபோல் வந்த நோய்களுக்கு அவர்கள் தயாராக வைத்திருந்த பூச்சிக்கொல்லிகளை அளித்த போதும், அவர்கள் தயாராக நமக்கு அளித்த தெளிப்பானையும் கண்டு - அது வரை நாம் பூவாளியை மட்டுமே அறிந்திருந்தோம் - யாருக்குமே எந்த சந்தேகமும் வரவில்லை. அதற்கு முக்கிய காரணமாக பலரும் சொன்னது மூன்று முதல் நான்கு மேனி வரை விளைச்சல் இருந்ததால் இதையாரும் சட்டை செய்யவில்லை. இந்த கால கட்டத்தில்தான் அரசு 2 ரூபாய் பரிசுச் சீட்டுகளை அறிமுகப்படுத்தியது.

மணிலாவில் உள்ள அனைத்துலக அரிசி ஆராய்ச்சி நிறுவனம் நம்மிடமுள்ள பாரம்பரிய நெல் ரகங்களை எடுத்துக் கொண்டு ஐ.ஆர்.8, தைச்சுங் என்ற இரண்டு வீரிய ரகங்களை இந்தியாவிற்கு அனுப்பி வைத்தது.      இந்த இரண்டு நெல்வகைகளும் வைரஸ் நோயுடன் இறக்குமதி செய்யப் பட்டதாக டாக்டர் ரிச்சாரியோ கூறியுள்ளார். ஐ.ஆர் 8 விதைநெல் இறக்குமதியைத் தடுக்க முயற்சித்ததால், அவரது பதவி பறிபோயிற்று. இவர் கட்டாக்கில் உள்ள இந்திய அரிசி ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குனராயிருந்த விஞ்ஞானி. நிறைய விளைச்சல் தரக்கூடிய பாரம்பரிய நெல் விதைகளைச் சேகரித்து வைத்த பெருமைக்குரியவர். ஐ.ஆர் 8, தைச்சுங் போன்ற வீரிய ரகநெல் இறக்குமதியினால் இந்தியாவில் முதல் முறையாக துங்க்ரோ வைரஸ், டிராக்கிட்டர் வைரஸ் நோய்களும் பரப்பப்பட்டன.                    ஆர்.எஸ்.நாராயணன். தினமணிக் கட்டுரை.       

சுமார் 50 ஆண்டுகளுக்குப் பின்பும் முழுச் செய்தியையும் கூற நாராயணனுக்கு மனமில்லை. .... பாரம்பரிய நெல் ரகங்களை எடுத்துக்கொண்டு ... என்று எழுதுகிறார். திருடப்பட்டது என்று எழுத மனமில்லை. 86இல் Illustrated weekly of India, வெளியான திரு ரிச்சாரியோவின் நேர்காணலில் விவரித்த அந்நிகழ்வை 28 ஆண்டுகள் கழித்தும் இன்னும் முழு உண்மையைச் சொல்ல மனமில்லை. அதுதான் இன்றும் நம் நாட்டின் தலையெழுத்து. பல ஆயிரம் வருடங்க

ளாக அவர்கள் உணமையைச் சொல்பவர்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்தி இருப்பதால் நமது தலையேழுத்தே நமக்கு எதிராகவும், சிக்கலாகவும் இருக்கிறது.

இவ்விவசாயிகளின் மேனி மயக்கத்தை தொடக்கநிலை வேளாண் கூட்டுறவு வங்கியின் கடன் விபரக் கடிதங்களும், சிலருக்கு ஜப்தி நோட்டீஸ்களும் கலைத்தபோது வெள்ளம் தலைக்கும் மேலே ஓடிவிட்டது. நிறைய விவசாயிகள் மாடுகளை, வண்டிகளை, எருக்கிடங்குகளை, தலைமுறை தலைமுறையாக வைத்திருந்த விதைகளை எல்லாவற்றிற்கும் மேலாக தங்கள் தன்னம்பிக்கையையும்* தொலைத்து விட்டு நின்றனர். ஒருசில விவசாயிகள் மாடுகளுக்கு

பதிலாக டிராக்டர் வைத்திருந்தார்கள். ஏதோக் கோளாரு நடந்துவிட்டது, என்னவென்று புரியாமலே, தங்கள் நிலத்தை விற்று கடனை அடைத்து ஊரைக்* காலி செய்தவர்கள் கொஞ்சம், இப்படியே போனால் பிள்ளைகளின் எதிர்காலம்... என பயந்து உடமைகளை விற்று விட்டு போனவர்கள், இப்படிப்பட்டவர்கள் தான் எல்லா நவீன முறைகளையும் கடைபிடித்து நல்லபடியாக விவசாயம் செய்து - அதற்காக ரசாயன உரங்களையும் பூச்சி மருந்துகளையும் வாங்கி யவர்கள் - நாசமாய் போனவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதிகப்படியாக விளைந்தும் என்ன காரணத்தினால் தங்கள் கடன் சுமையைக் குறைக்க முடியவில்லை என்று அவர்களுக்கு ஏன் தட்டுபட வில்லை என்பது புரியாத புதிராக உள்ளது. கிராமப்புற வண்டிப்பேட்டைகள் அனேகமாக அழிந்து விட்டன. கிராமப்புறச் சந்தைகள் பெரும் எண்ணிக்கையில் காணாமல் போய்விட்டன. புதிதாக உருவாக வேண்டிய பள்ளிகள் உருவாகாதது மட்டுமல்ல இருப்பதும் சில ஊர்களில் சீரழிகிறது. குடிமறாமத்து முறையே மறைந்து விட்டது கொல்லர்கள் தச்சர்கள் எனக் கைவினைஞர்களின் வெளியேற்றம் முதலியன முக்கியமானவை.

ஒரு வரியில் இவர்கள் வெளியேறி விட்டார்கள் என்கிறோம். வாழ்வதற்கு என்னபாடு பட்டிருப்பார்கள்?. - ஆனந்த விகடன் பத்திரிகையில் திரு ராம கிருஷ்னண் இது போன்ற ஒரு தொழிலாளியைப் - கிருஷ்ணாசாரி - பற்றிய கதையில் 100 பக்கங்களில் சொல்ல வேண்டியதை சில பக்கங்களில் அழமாக நெஞ்சில் அறைவதைப் போலச் சொல்லி யிருந்தார். நெல்லையும் பருத்தியையும் மலைமலையாக குவித்தவர்கள் என்ன காரணத்தினால் கிராமங்களை விட்டு ஓடினார்கள் என்பதைப் பற்றி யாரும் சிறிதளவு கூட சந்தேகப்படவில்லை. அந்த அளவிற்கு இப்பணியை விசுவாசமாகவும், கச்சிதமாகவும் நமது ஊடகங்கள்* - காசு கொடுத்து நாம்தான் வாங்குகிறோம் - செய்து முடித்தன.

*குளம் பெருகட்டும் ஒத்த வரியில் கடனை அடைக்கிறேன் என்று பொதுவாக இவ்விவசாயிகள் முன்பு பேசிய - 80 கள்வரை - துண்டு. ஆனால் 90கள் வாக்கிலேயே இப்படி எந்த விவசாயியும் பேசி நான் கேட்டதில்லை. வெளிப்படையாக இது குறித்து அவர்களிடம் பேசிய போது மௌனமே பதிலாகக் கிடைத்து.

*இப்படி ஊரைக்காலி செய்வது மிகவும் கேவலமாக - குடிபிடிங்கி போனார்கள் என்று - அன்று பார்க்     கப்பட்டது. இன்று ஊரை விட்டுச் செல்வது நல்ல வசதி வாய்ப்பு போல பார்க்கப் படுகிறது. 75 - 80கள்     வாக்கில் ஊரைக்காலி செய்தவர்கள்தான் - யூரியா வாங்குவதற்காக உரக்கடைகளில் இரவே சென்று வரிசைப்படி படுத்து கிடந்து யூரியா வாங்கினாலும் கூட - பட்டம் தெரிந்த, விதை வித்துக்கள் அறிந்த,    தண்ணீர் வரத்துக்கள் அறிந்த - விவசாயம் சார்அறிவுவுடையவர்கள். ஊர், பள்ளி, பாசன கட்டுமானங்கள் முதலியவைகள் மீது ஆளுமை உடையவர்களாகவும் இருந்தார்கள். இன்று இவ்வூர் - பள்ளி, பாசனக்கட்டுமானங்களின் - சீர்கேட்டின் வேர்களை தேடிச் சென்றால் அவை இம்மக்கள் வெளியேறியதில்தான் போய்      முடியும்.. கள்ளச்சாராய வடிப்புகளும் இவர்களின் வெளியேற்றத்திற்குப் பின்னால்தான் கொடிகட்டி பறந்தது.

*நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது நம் நாட்டிலிருந்து பஞ்சுப் பொதிகள் ஏற்றுமதியானது. பஞ்சாலை      அதிபர்கள் - இந்திய   அரசியல் கட்சிகளுக்கு படியளந்த பரமசிவர்கள் - இதனை எதிர்த்து தீர்மானம் நிறை   வேற்றி அரசுக்கு அனுப்பினர். அவர்கள் சார்பில் ஒருகுழுவும் அமைச்சர்களைச் சந்தித்தது. ஆனால் அரசு      திட்டமிட்டபடி ஏற்றுமதி செய்தது. பருத்தி விவசாயிகளுக்கு இந்த ஏற்றுமதியால் ஒரு பைசாகூட லாபமில்லா தபடி அல்லது லாபம் கிடைக்காதபடிதான் இந்த ஏற்றுமதி திட்டமிடப்பட்டு அரங்கேரியது. இது தவறுதலாக    நடந்துவிட்டது எனக் கூறமுடியாது. ஏனென்றால் இதே ஏற்றுமதி இறக்குமதி மீண்டும் - பரமசிவர்களின் எதிர்பையும் மீண்டும் மீறி - நடந்தது. எதற்காக யார் இவ்வளவு புத்திசாலித்தனமாக திட்டமிட்டு செயல்படுத்தினர்? நஞ்சைவயல்கள் எப்படி நாசமாக்கப் பட்டதோ அதுபோல பருத்தி சாகுபடியான - புஞ்சை -    கரிசல் காடுகளும் நாசமானதை சந்தேகமில்லாமல் உணர்ந்து கொண்டவர்கள், பருத்தி விவசாயத்தையும் பஞ்சாலைத் தொழிலையும் கருவருக்க* முடிவெடுத்து செயல்படுத்தியதே இந்த ஏற்றுமதி இறக்குமதி திட்டம்.

கங்காணிகளின் பங்கு? திட்டமிட்டது யாரோ?, நடத்திக் கொடுத்தது கங்காணிகள். ஏனென்றால் இந்த அளவுக்கு திட்டமிட கங்காணிகளுக்கு அறிவில்லை. ஆனால் இத்திட்டம் முடிந்து பலன்கள் -விளைவுகள் - தெரிந்த போதும்.... அவர்களுக்கு சிறிதளவுகூட மனசாட்சி இருந்ததாகத் தெரியவில்லை. இதுகுறித்த ஒட்டு மொத்தத் தகவல்களையும் கொஞ்சம்கூட வெளியாகாமல் பத்திரிகையாளர்கள் பார்த்துக் கொண்டார்கள். அரசியல்வாதிகள் நன்றி கெட்டவர்கள், பத்திரிகையாளர்கள்...? தர்மம்,        ஞாயம், தொழிலாளர்நலம், நாட்டு முன்    னேற்றம் இவைகளுக்காகவே உயிர் வாழ்வதாகக் கூறிக்கொள்ளும் இப்பத்திரிகைகள் - விளம்பரங்கள்      அளித்து வாழ்வு கொடுத்த ஜவுளியாலை அதிபர்களின் படிப்படியான வீழ்ச்சியை - அமைதியாக எதுவுமே நடக்காததுபோல பார்த்துக் கொண்டிருந்ததை.... ஜீரணிக்க முடிகிறதா...

தினமணி பத்திரிகை - இதுபோல் பஞ்சுப்பொதிகள் பலதடவைகள் ஏற்றுமதியும் பிறகு இறக்குமதியும் நடந்த பிறகு பி. ஜெ. பி. யின் ஆட்சிகாலத்திலும் இதே கூத்து நடந்தது - இப்படி ஒரு கூத்தை அரசு மீண்டும் செய்த போது - அந்த வருடம் ஏற்றுமதியாவதற்கு முன் - பஞ்சாலை அதிபர்கள் அதை தடுக்க எடுத்த ஒரு முயற்சியை இந்த லட்சணத் தில்தான் வெளியிட்டு இருந்தது. அச்செய்தி ;

பருத்தி ஏற்றுமதிக்கு ஆட்சேபம் பம்பாய், நவ.8- 5 லட்சம் பேல் பருத்தியை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்   பட்ட முடிவை மாற்ற வேண்டும் என்று ஜவுளி ஆலைகள் அரசை வலியுறுத்தியுள்ளன. தற்போதைய சூழ்நிலையில் பருத்தியை ஏற்றுமதி செய்வது எந்த விதத்திலும் சரியல்ல என்று மைய ஜவுளித் துறை இணை அமைச்சர் அசோக்கே லோத்திற்கு அனுப்பிய கடிதத்தில், இந்திய பருத்தி ஆலைகள் சம்மேளனத் தலைவர் ரோஹித் மேத்தா கூறியுள்ளார்.

லட்சக் கணக்கான ஜவுளியாலை தொழிளாளர்களின் வாழ்வை நடுத்தெருவுக்கு கொண்டுவர காரணமாக இருந்த இச் செயலை அரசும் அரசியல்வாதிகளும் சேர்ந்து செய்த - இக்கழுத்தறுப்புச் - செயலை தினமணியே இந்த அளவிற் குத்தான் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டது. இந்த ஆலை அதிபர்கள் இவ்வூடங்களுக்கு எவ்வளவு விளம்பரங் கள் தந்திருப்பார்கள். படியளந்த பரமசிவர்களுக்கே இந்த கதி என்றால், விவசாயிகள் ....

எப்படி ஒரு திடகாத்திரமான மனிதன் ஊக்க மாத்திரைகள் சாப்பிட்டால் அதிகப்படியான வேலை செய்ய முடியுமோ அப்படி நமது நிலம் செயல்பட்டு 2 முதல் 4 மேனி வரை விளைச்சல் தந்தது. அந்த மனிதன் எப்படிச் சீரழிவானோ அதுபோலவே நிலமும் படிப்படியாக தனது வளத்தை இழந்து கொண்டு வந்தது. 1980 இல் எனது இலக்கிய நண்பர் திரு. ராஜு ரெட்டியார் - வாடிப்பட்டி ஆண்டிப்பட்டி - சொன்னத் தகவல் எங்கள் பகுதியில் 1890 முதல் பெரியார் பாசனம் நடக்கிறது. 1970கள் முடியும் வரை தண்ணீர் வரத்து ஒழுக்காகத்தான் இருந்தது. சுமார் 70 வருடங்கள் இருபோகம் நஞ்சை பயிர் செய்தோம். இப்போது ஒரு 10,12 வருட காலமாக இப்பசுமைப் புரட்சி விவசாயம் செய்கிறோம். மனிதர்களுக்கு மருந்து மாத்திரைகள் கொடுப்பது போல நிலத்திற்கும் போடச் சொல்கிறார்கள். ஏன் இப்படி என்று வேளாண் துறையினரைக் கேட்டால் Indencive

rice cultivation என்று சொல்கிறார்கள். 10 அல்லது 12 வருடங்கள்தானே ஆகிறது. 70 வருடங்களில் இப்படி இல்லையே. மேனியும் பழைய அளவிற்கு வந்துவிட்டது.

இப்புரட்சிக்கு முன்பு வயலில் நடந்தால் கால்பதிவதை உணர முடியும். இன்று வயலில் நடப்பதும் ரோட்டில் நடப்பதும் ஒன்று போல இருக்கிறது என்று சொன்னார். என்னால் அன்று இதை உள்வாங்க முடிய வில்லை. இன்று என்ன நடந்தது என்று - வந்தனா சிவா* போன்றோரின் வாயிலாக - புரிகிறது. இந்த ரசாயன உரங்களையும், பூச்சிக்கொல்லி களையும் பயன்படுத்தினால் அவை இந்த நிலத்தில் எப்படி செயல்படும் என்பது விஞ்ஞானி சாமிநாதன் முதல் வேளாண் துறை அதிகாரிகள் வரை அன்றே அறிந்துதான் இருந்தார்கள். இந்த நிலங்கள் நாசமாக 10 வருடமாகுமா 15 வருடமாகுமா என்பது வேண்டுமானால் துல்லியமாகத் தெரியாமல் இருக்கலாம் என்ன விளைவு என்பது நிச்சயமாகத் தெரியும். ஊக்க மருந்து சாப்பிடும் ஒரு விளையாட்டு வீரர் என்ன ஆவார் என்பதை ஒரு அலோபதி மருத்துவர் எப்படி அறிவாரோ அப்படி இவர்களும் அறிவார்கள்.

மனிதர்களுக்கு ஜீரண உறுப்புகள் இருப்பது போல் பயிர்பச்சைகளுக்கு இல்லை. மண்ணில் என்ன சத்து இருந்தாலும் அது தண்ணீரில் கரைந்தால் மட்டுமே பயிர்களுக்கு கிடைக்கும். பசுமைப்புரட்சிக்கு முன் இது சாத்தியமாக இருந்தது. மண் வளம் என்பது நுண்ணுயிர்கள் நிறைந்த மண் வளமே. இம்மண்ணில்தான் நாம் ரசாயன உரங்களையும், பூச்சிக் கொல்லிகளையும், களைக்கொல்லிகளையும் தெளித்து மண்புழு முதல் நுண்     உயிர் ஈராக எல்லாவற்றையும் அழித்து மண்ணை மலடாக்கி விட்டோம். மண் புழுக்கள் இறந்தது வெளிப்படையாகத் தெரிந்தது. ஆனால் அதன் சங்கிலித் தொடராக அதன் கழிவுகள் மூலமாக வெளியாகும் நுண்ணுயிர்கள் மண்ணிலுள்ள பலத்தாதுப் பொருட்களின் துகள்களை இந்நுண்ணியிர்கள் உண்டு செரித்து கழிவு     களாக வெளியேற்றும் போது அவை நீரில் கரையும் பொருட்களாக மாற்றுவது நின்று போனது. ஆகையால் நிலத்தில் எல்லாச் சத்துக்கள் இருந்தும் பயிர்களுக்கும் நீரைத் தவிர எந்தச் சத்துக் கிடைக்கவில்லை. இது வேளாண் துறையினருக்கு தெரியாததும் இல்லை. பொட்டாஸ் நிறுவனம் தனது பொட்டாஸ் 90 விழுக்காடு தண்ணீரில் கரையும் என்று விளம்பரம் தருவதை பார்த்திருக்கலாம். ஆனாலும் கூசாமல் Indencive rice cultivation என்று சொல்ல முடிந்தது. நீரில் கரையும் பிரச்சினையைத் தவிர்ப்பதற்கு அவர்கள் கையாண்டதுதான் நேரடியாக பயிர்கள்மீது தெளிக்கும் முறையும் அதற்கான தெளிப்பு மருந்துகளும். micro nutrient spray, harmon spray, plant N.A.A, Spic planofi x முதலிய தெளிப்பு மருந்துகளை விவசாயிகளுக்குப் பரிந்துரைத்தனர்.