ஹிட்லர் ஒருசமயம் மனநல மருத்துவமனை ஒன்றைப் பார்வையிடச் சென்றார். அப்போது ‘வாழ்க ஹிட்லர்’ என்று மனநோயாளிகள் கோஷம் எழுப்பினர். ஒரேயொருவர் மட்டும் அமைதியாக இருந்தார். 

ஹிட்லர் கோபமாக அவரிடம், ‘நீ மட்டும் ஏன் வாழ்க என்று கூறவில்லை’ என்று கேட்டார்.

அதற்கு அமைதியாக “நான் நோயாளி இல்லை, நான்தான் இங்கு டாக்டர்” என்று பதிலளித்தாராம்.

Pin It

ஆஸ்கார் ஒயில்டு ஒரு கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தார். அப்பொழுது ஒருவன் எழுந்து கிண்டலாக, “உங்கள் தாத்தா ஒரு கழுதை வண்டியை ஓட்டியவர் என்பது ஞாபகம் இருக்கிறதா?” என்று கேட்டான். அதற்கு அவர் அமைதியாக, “என் தாத்தாவின் வண்டி தொலைந்துவிட்டது. கழுதை மட்டும் உயிரோடு இருப்பதை இப்பொழுதுதான் கண்டு கொண்டேன்” என்று பதில் சொன்னாராம்

Pin It

அய்யா(பெரியார்) வெளியிட்ட குடிஅரசு இதழ் பச்சை அட்டையைத் தாங்கி வந்தது. இப்படி பச்சை அட்டையை அய்யா தேர்ந்தெடுக்கக் காரணம் என்ன என்று பலவாறு யோசித்து யோசித்துக் கடைசியாக ஒரு காரணத்தைக் கண்டுபிடித்தேன்.

ரஷ்யாவில் லெனின் நடத்திய பத்திரிகையின் நிறம் பச்சை! லெனின் வெளியிட்ட முதல் அறிக்கையின் நிறம் பச்சை! காந்தியார் வெளியிட்ட முதல் அறிக்கை பச்சைத் தாளில், இதையெல்லாம் கண்டுபிடித்து. அய்யாவும் இவைகளைப் பின்பற்றிதானே பச்சை அட்டையைப் பயன்படுத்தியிருப்பார் என்ற முடிவோடு இருந்தேன். ஒரு நாள் சமயங்கிடைத்தது. அய்யாவிடம் நேரில் இதையெல்லாம் எடுத்துக் கூறி நீங்களும் அவற்றைப் பின்பற்றிதானே பச்சை அட்டையைப் பயன்படுத்தினீர்கள் என்று கேட்டேன்.

நாசமா போச்சு என்று சொல்லிவிட்டு சிரித்து விட்டு சொன்னார்.

சென்னையில் பெருமாள் செட்டிதான் நமக்கு பேப்பர் வாங்கித் தருபவர். நான் சென்னை சென்றபோது பி.ஆர். அண்ட் சன்னுக்கு சென்றேன். அவர்கள் எல்லா வித பொருள்களையும் விற்பார்கள். சுற்றிப் பார்த்துக் கொண்டு வரும்போது ஒரு ஓரமாக பெரிய பெரிய பேப்பர் கட்டுகள் அடுக்கி வைத்திருப்பதைப் பார்த்தேன். ஏன் விலை போகாமல் இருக்கிறது என்று கேட்டபோது ஏதோ ஒரு சாமானுக்கு லேபிள் ஒட்ட பயன்படுத்தியபோது இந்த ஓட்டை விழுந்து விட்டது. அதனால் யாரும் அதை வாங்காமலிருக்கிறார்கள் என்றார்.

நான் அளவெடுத்துப் பார்த்தபோது ஓட்டையை நீக்கினால் நமது பத்திரிகையின் மேல் பகுதியாக போடலாமெனக் கருதி அத்தனை பேப்பரையும் குறைந்த விலைக்கு வாங்கி வந்து நமது குடிஅரசு பத்திரிகைக்குப் பயன்படுத்தினேனே தவிர இதற்கென்று ஒரு தனி சரித்திரமில்லை என்றார்.

------------------------

28.11.2009 அன்று பெரியார் பெருந்தொண்டர் எஸ்.ஜி. ராமானுசம் அவர்கள் அளித்த பேட்டியிலிருந்து.... பேட்டி கண்டவர்.
திராவிடர் கழக பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன். -- "விடுதலை" ஞாயிறுமலர் 9-1-2010 பக்கம் 3

அனுப்பி உதவியவர்: தமிழ் ஓவியா

Pin It

எல்லா உயிரினங்களையும் - பறவைகள் மிருகங்களையும் - நேசியுங்கள். ஏனென்றால் மனிதனும் ஒருவகை விலங்குதான் என்கிற கருத்தைப் பரப்புவதற்காக இலண்டன் உயிரியல் பூங்காவில் ஒரு வித்தியாசமான காட்சி நிகழ்த்தப்பட்டது.

மொழிகள் இல்லாத, உடைகள் இல்லாத ஆதி மனிதர்களின் வேடத்தில் சில ஆண்களும் பெண்களும் மனிதனின் மூதாதையரான குரங்கு களின் நடவடிக்கைகளோடு குகைகளில் வாழ்ந்து காட்டினார்கள். ஆதிவாசிக் கோலத்தில் இந்த ஆண்களையும் பெண்களையும் காண உயிரியல் பூங்காவில் பார்வையாளர் கூட்டம் அலைமோதியது.

இந்தக் `கூடத்தைக்’ காணக் கவர்ச்சிப் பிரியர்களே அதிகமாக வந்தார்கள் என்றாலும், புதிய சிந்தனைகளும் மலரத்தான் செய்தன. போர் வெறியர்களான புஷ்ஷும் பிளேரும் பதவியில் நீடித்தால், நாகரிக உலகம் அழிந்து எஞ்சிய மக்கள் குகைகளில் இப்படித்தான் திரிவார்கள் என்று பார்வையாளர்களில் பலர் விமர்சனம் செய்தார்கள். அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் மனிதர்களாய் வாழ்வதைவிட, காடுமேடுகளில் மிருகங்களாய் வாழ்வதே மேலானது என்று அரசாங்கமே பிரச்சாரம் செய்கிறதா?’’ - இளைஞர்கள் சிலர் கிண்டலடித்தார்கள்.

``சதாம் உசேனைச் சிறைக்கு அனுப்பினார்கள். இங்கிலாந்து மக்களைக் குகைக்கு அனுப்பி விட்டார்கள்.’’ இப்படியும் சில இடித்துரைகள். தொடர் குண்டு வெடிப்புகளால் பீதியுற்றிருந்த இலண்டன் மக்கள் இந்த அரசியல் நையாண்டியை வெகுவாக இரசித்தார்கள்.

``மனித இனம் குகைக்குத் திரும்புவதா? போர் வெறியர்களைச் சிறைக்கு அனுப்புவதா? முடிவு செய்யுங்கள்’’ என்று சூடாகக் கூறியவர்களும் உண்டு.

``ஐன்ஸ்டீன் சொன்னது நினைவுக்கு வருகிறது’’ என்றார் ஒரு பெண்மணி.

``ஐன்ஸ்டீன் என்ன சொன்னார்?’’

இரண்டாம் உலகப் போர் முடிந்தபோது ``இன்னொரு உலகப்போர் நடந்தால் அது எப்படி இருக்கும்?’’ என்று ஐன்ஸ்டீனிடம் கேட்கப்பட்டது. அவர் சொன்னார்:

``மூன்றாம் உலகப் போரின் முடிவு எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியாது. ஆனால், அதற்குப் பின் போர் என்றால் கற்களால் அடித்துக் கொண்டு மனிதர்கள் குகைகளில்தான் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்!’’

பிரிட்டிஷ் அரசுக்கும் ஈராக் யுத்தத்துக்கும் எதிரான கருத்துக்கள் பரவ ஆரம்பித்ததால் `ஆதிமனிதக் காட்சியை’ நாலே நாளில் முடித்துக் கொண்டார்கள்.

 

Pin It

மாவீரர்நாள் தொடங்கிய ஆண்டு: 1989

முதல் மாவீரர்: சங்கர் (27/11/82)

முதல் சைனைடு அருந்திய போராளி: பாகின் (18/05/84)

முதல் பெண் போராளி : மாலதி (10/10/87)

முதல் பெண் கரும்புலி : அங்கையர்கன்னி (16/08/94)

 

Pin It