சக்தியளிக்கும் உணவு, சக்திக்கேற்ற உழைப்பு, புத்துணர்வு நல்கும் ஓய்வு, என்பவை மனிதனின் உடல் நலத்திற்கும்,மனநலத்திற்கும் ஆதாரங்கள். இவற்றில் ஏற்ற இறக்கம் ஏற்படும் போது பாதிப்புகளிலிருந்து தப்ப முடியாது. சுமார் 50 சதவீத மக்கள் ஏதேனும் ஒரு தூக்க நோயால் பாதிக்கப்பட்டுள்ள தாகவும் இவர்களில் 15 சதவீத மக்களே உதவிகளை நாடுகின் றனர் என்றும் ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

Primary Sleep Disorders,Secondary Sleep Disorders,Parasomnias என்று பலவிதங்களில் தூக்கக் கோளாறுகள் காணப்படுகின்றன. தூக்கத்தில் ஏற்படக்கூடிய சில அசாதாரணச் செயல்பாடுகள் ‘Parasomnias’ என்றழைக்கப் படுகின்றன. தூக்கத்தினூடே அலறி விழிப்பது, சிறுநீர்கழிப்பது, பற்களைக் கடிப்பது, தூக்கத் திலேயே எழுந்து நடப்பது, தூங்கிய நிலையிலே பேசுவது போன்ற அசாதாரணச் செயல்பாடுகளை (குறைபாடுகளை) ஆங்கிலச் சிகிச்சை மூலமா கவோ, வெறும் கலந்தாலோசனை மூலமாகவோ முழுமையாகக் குணப்படுத்த இயலாது.

‘Somnambulism’ என்பது தூக்கத்திலேயே நடப்பதைக் (Sleep walking) குறிக்கும். பெரும்பா லும் தூங்க ஆரம்பித்த முதல் சிலமணி நேரங்களிலேயே இது நடைபெறுகிறது. தூக்கத்திலேயே எழுந்து, வெற்றுப் பார்வையோடு நடைபயிலக் கூடிய இவர்களோடு மற்றவர்கள் தொடர்பு கொள்ள இயலாது. இந்த நேரத்தில் இவர்களை விழிக்கச் செய்தலும், உணரச்செய்தலும் குழப்ப மடையச் செய்துவிடும். கோபமடையச் செய்து விடும்; மன நிலையில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.

இக்குறை உள்ளவர்களில் சிலர் தூக்கத்திலேயே எழுந்து தனது படுக்கையை மட்டும் ஒரு சுற்று சுற்றி ஒரு முறை நடந்துவிட்டு மீண்டும் படுத்துக்கொள்வார் கள். ஒரு சிலர் எழுந்து நின்று விட்டோ அல்லது உட்கார்ந்து விட்டோ மீண்டும் படுத்துக் கொள்வார்கள். வேறு சிலரோ கதவைத்திறந்து வெளியே அருகி லுள்ள சில இடங்களுக்குச் சென்றுவிட்டு வீட் டுக்குத் திரும்பி படுக்கையில் படுத்துக் கொள் வாôர்கள். இத்தகைய பழக்கமுள்ளவர்கள் தூக்கத்திலே எழுந்து, வீடு தாண்டி, நடந்து தெருவை, சாலையைக் கடக்கும் போது ஆபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே, உரிய சிகிச்சை மூலம் பூரண குணமடையும் வரை இவர்கள் தூங்கும் சூழ்நிலையைப் பாதுகாப் பாக வைத்திருக்க வேண்டியது அவசியம்.

தூக்கத்தில் எழுந்து நடமாடும் கோளாறுகளைக் குணப்படுத்த ஹோமியோபதியில் கீழ்கண்ட மருந்துகள் சிறப்பாகப் பயன்படுகின்றன. நேட்ரம்மூர், ஓபியம், பாஸ்பரஸ், சிலிகா, சல்பர், ஆர்டிமிசியா வல்காரிஸ், டிக்டேனஸ், காலிபுரோ மேட்டம், ஜிங்கம் மெட், காக்குலஸ். 

தூக்கத்தில் பீதியடைந்து பயங்கர அலறலுடன் (Sleep Terror/Night Mare) படபடக்கும் இதயத்துடன், வியர்த்து விறுவிறுத்து, மூச்சிறைத்து விழிப்பவர்களுக்கும் ஹோமியோபதியில் சிறந்த சிகிச்சை அளித்து குணப்படுத்த முடியும். இப்படி விழிப்பவர்களின் பதட்டம் ஒரு நிமிடம் முதல் பத்து நிமிடங்கள் வரை நீடிக்கலாம். அந்த நேரத்தில் அவர்களைச் சமாதானப்படுத்தவோ, சாந்தப் படுத்தவோ முயற்சி மேற்கொண்டால் எந்த பலனும் இருக்காது. அவர்களாகவே தூங்கி விழித்தபின் எல்லாவற்றையும் மறந்து போவார்கள்.

சிலர் சிலநேரங்களில் பயங்கரக்கனவு கண்டு விழிப்பதுண்டு அத்தகைய கனவுகள் கொடூரமான தாகவும் தெளிவாகவும் இருப்பதுண்டு. கனவுகளின் பாதிப்பினால் விழித்து பயந்து சத்தமிட முயற்சிப் பார்கள்; ஆனால் சத்தம் வெளியே வராது. கை களை அசைக்க முயற்சிப்பார்கள். ஆனால் அசைக்கமுடியாது. ஏதோ இனம்புரியாத ஒன்று நெஞ்சில் அழுத்துவது போல உணர்வார்கள். சில நிமிடங்கள் அசையாமல் இருந்து விட்டு பின் தெளிவடைவார்கள். அதற்குப்பிறகு விழிகள் மூடித்தூங்கவே பயப்படுவார்கள் (பெண் குழந்தைகளிடம் இந்நிலை அதிகளவில் காணப்படு வதாகவும் கூறப்படுகிறது) இத்தகையவர்களுக்கு தகுந்த ஹோமியோபதி சிகிச்சையும், உள்ளத்தை வலிமைப்படுத்தும் பயிற்சிகளும் தேவை. கீழ்கண்ட மருந்துகள் மிகவும் பயனளிக்கக்கூடியவை.

போராக்ஸ் - தூக்கத்தில் திடீரென பயந்து அலறுதல் (குழந்தை தாயை     அல்லது தொட்டிலை இறுக்கிப் பிடித்துக்கொள்ளும்)

அம்மோனியம் கார்ப் - இருதய வியாதி காரணமாக ஒவ்வொரு  இரவிலும் பீதியும் விழிப்பும் ஏற்படுதல் (நித்திய கண்டம்!)

சாமோமில்லா -  பயங்களூட்டும் கனவுகளால் தூங்கிக் கொண்டே அழத் துவங்குதல்

சீட்ரான் - இறந்து போனவருடன் சண்டையிடும் கனவுகள் காரணமாக பீதியுற்று விழித்தல்

லேடம்பால்     - தொண்டைப் பகுதி வீங்கியது போலவும், மூச்சுத் திணறுவது     போலவும் ஏற்படும் உணர்வால் மூச்சடைத்து விழித்தல், தூக்கத்திலேயே இறந்து போக நேரிடலாம் எனப் பயந்து தூங்கச் செல்லப் பயப்படுதல்.

காலி புரோமேட்டம் - குழந்தைகள் இரவில் திடுக்கிட்டு விழித்து கீறிச்சிடல், நடுங்குதல்.

சிலிகா  - தூக்கத்திலிருந்து திடீரென எழுதல்-எழும்போது உடம்பெல்லாம் நடுங்குதல்.

ஓபியம்    - தூக்கத்தில் பயந்து கத்திக் கொண்டு எழுதல்.

பேயோனியா - நெஞ்சுமீது பேயோ, பிசாசோ ஏறி அமுக்குவது போன்ற உணர்வுடன் விழித்தல், முனகுதல்.

நக்ஸ்வாமிகா    - அதிகளவு இரவு உணவாலும், குடிப்பழக்கத்தாலும், ஜீரணக் குளறுபடிகளாலும் அமைதி கெட்டு தூக்கம்  கெட்டு, தூக்கத்தில் ஆளை அமுக்கும் (NightMare), உணர்வோடு விழித்தல்.

கல்கேரியா கார்ப் -     இரவில் அடிக்கடி விழித்தல்,      வாயை மெல்லுதல்,

விழுங்குதல், அதிகளவு தலையில் வியர்த்தல் ,குழந்தைகள் நடுநிசிக்குப் பின்   வீரிட்டுக் கத்துதல்.

கோனியம் -     மூளைச் சோகை (Cerebral Anaemia) காரணமாக பதட்டத்துடன் விழிப்பு.

டிஜிடாலிஸ்     -     உயரத்திலிருந்து கீழே விழுவதாக அல்லது நீரில் விழுவதாகக் கனவு கண்டு கலவரத்தோடு விழித்தெழுதல். தூக்கத்திலேயே தன்னுணர்வின்றி விந்து கழிந்ததும் திடுக்கிட்டு எழுதல்.   

Primary Sleep Disorders’ எனப்படும் தூக்கம் மட்டுமே பாதிக்கப்பட்ட நிலை ஒரு பகுதியினரிடம் உள்ளது. இவர்களிடம் தூக்கத்தின் அளவு, தன்மை பாதிப்பு தவிர வேறு பாதிப்புகள் இருப்ப தில்லை. காரணகாரியமற்று வெறுமனே விழித்துக் கொண்டிருப்பது  இவர்களின் வாடிக்கையாகி விடுகிறது. இத்தகையவர் களுக்கு ‘பாசிபு ளோரா’ ‘அவீனாசடீவா’ போன்ற ஹோமி யோ மருந்துகள் மிகவும் பயன் தரக்கூடியவை. “அலோபதியிலுள்ள தூக்க மாத்திரைகளே கதி” என்ற நிலையிலிருப்பவர்களையும் ஹோமியோ மருந்துகள் மூலம் மீட்க முடியும்.

‘Secondary Sleep Disorders’எனப்படும் தூக் கக் கோளாறுகள் பிற காரணங்களால் ஏற்ப டக்கூடியவை. மன எழுச்சிகள், அதிர்ச்சிகள், கவலைகள், தீவிர உடல்நலக்குறைபாடுகள், மனநோய்கள் போன்ற வேறு பல பிரச்சினை களோடு ஒட்டியே தூக்க பாதிப்பும் ஏற்படுகிறது. அடிப்படை காரணங்கள் சரி செய்யப்படும்போது தூக்க ப்பாதிப்பும் சரியாகிவிடுகிறது.

     “என்ன சொல்லுவேன்

     என்னுள்ளம் தாங்கலே!

     மெத்தை வாங்குனேன்

தூக்கத்த வாங்கலே!” என்று சோகம் ததும்ப ஆழ் மனத் துயரங்களில் மூழ்கிக் கிடப்போ ருக்கு அமைதியான தூக்கம் எப்படி அமையும் இவர்களுக்கு ‘இக்னேஷியா‘  ‘நேட்ரம்மூர்‘ போன்ற மருந்து கள் அளித்தால் மனசின் பாரம் குறையும்;  நிம்மதி யான தூக்கம் அரவணைக்கும்.

     “எண்ணிரண்டு வயது வந்தால்

     கண்ணுறக்கம் இல்லையடி

     ஈறேழு மொழிகளுடன்

     போராடச் சொல்லுமடி

     தீராத தொல்லையடி! என்று பருவ

     வயதினரின் காதல் கிளர்ச்சிகளின் போதும்,

     “தூங்காத கண்ணென்று ஒன்று

     துடிக்கின்ற சுகமென்று ஒன்று”    

என்று துள்ளித்துள்ளி மனம் விளையாடி மகிழ்கிற போதும், உடலும் மனமும் கிளர்ச்சி அடைந்த நிலையில் தூக்கம் தூரப்போய்விடும். மணநாளை நெருங்கிக் கொண்டிருக்கும் மணமகன், மண மகளுக்கும், சுற்றுலா செல்லத் தயாராகும் சிறுவர் சிறுமியர்களுக்கும், தீபாவளி, பொங்கல், கிறிஸ்து மஸ் போன்ற விழாகாலங்களில் அனைத்து வயதின ருக்கும் தூக்கம் தொலைந்து போகிறது. இத்தகைய சூழ்நிலைப் பின்னணியில் தூக்கமின்மைக்கு சிறந்த மருந்து ‘கா.பியாகுரூடா’.

     “இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்

     இதுதான் எங்கள் உலகம்” என்றும் 

“சோறுன்னா சட்டிதின்போம்சொன்ன பேச்சு கேட்கமாட்டோம ராத்திரிக்குத் தூங்கமாட்டோம் விடியக்காலம் முழிக்கமாட்டோம்”

என்றும் முழக்கமிடும் நபர் களின் முறையற்ற உணவுப் பழக்கங்கள், குடி போதைப் பழக்கங்களால் தூக்கம் கெடு கிறது. தூங்கிவிட்டால், அதி காலை 3 மணிக்கே விழிப்பு ஏற்படுகிறது. இத்தகையவர் களின் தூக்கமின்மை பிரச் சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க நக்ஸ்வாமிகா சிறந்தது.

 “அத்தை மடி மெத்தையடி  

 ஆடிவிளையாடம்மா !

 ஆடும் வரை ஆடிவிட்டு

 அல்லி விழி மூடம்மா”

என்று அத்தையோ, மாமாவோ யார்கேட்டுக் கொண்டாலும் தூங்கவே தூங்காத குழந்தைகள் உண்டு. விழித்தபடி விளையாடும் குழந்தைகளும் உண்டு. வீறிட்டு அழுது இரவின் அமைதியைக் கிழித்து நாசப்படுத்தும் குழந்தைகளும் உண்டு. குழந்தைகளின் இத்தகைய தூக்கமின்மைக்கு ‘சாமோமில்லா’ ‘சைபிரிபீடியம்’, ‘சிபிலி னம்’,‘சோரினம்’, போன்ற மருந்துகள் குழந்தைகளிடம் காணப்படும் குறிகளுக்கேற்ப பயன்படுத்தி குணப்படுத்த முடியும்.

பயம் மற்றும் அதிர்ச்சி காரணமாகத் தூக்க மின்மை ஏற்பட்டு படுக்கையில் அமைதியற்ற நிலை யில் தவிப்போருக்கு ‘அகோனைட்’ மாதவிடாய் நிற்கும் காலத்தில் கர்ப்பப்பை எரிச்சல், அசௌக ரியம் காரணமாக ஏற்படும் தூக்கமின்மைக்கு ‘செனிசியா’ முதுமையில் ஏற்படும் தூக்கமின் மைக்கு ‘பரிடாகார்ப்’, பின்னிர வில் தூக்க மின்மைக்கு ‘பெல்லிஸ் பெரனிஸ்’, வீட்டு நினைவுத் தூக்கம் வராமைக்கு ‘காப்சிகம்’, கவலையினாலும் கொள்ளையர்கள் குறித்த கனவுக்குப் பின்பும் தூக்கம் வராமைக்கு ‘நேட்ரம்மூர்’, உடற் களைப்பால் உளைச்சலால் ஏற்படும் தூக்கமின் மைக்கு ‘ஆர்னிகா’, பகலில் சிறு தூக்கம் (Catnap sleep - பூனைத்தூக்கம்)

இரவில் தூக்கமின்மைக்கு ‘சல்பர்’ தாங்கமுடியாத வலியால் ஏற்படும் தூக்க மின்மைக்கு ‘சாமோமில்லா’, உறவினர்களுக்குப் பணிவிடை செய்யவேண்டிய கவலை கொண்ட மன  நிலையில், விழித்துப் பராமரிப்பதால் ஏற்படும் தூக்கமின்மைக்கு ‘காக்குலஸ்’, எலும்பு வலிகளால் தூக்கமின்மைக்கு ‘டாப்னே இண்டிகா’, தொழில் குறித்த கவலைகளால் ஏற்படும் தூக்கமின்மைக்கு ‘பிரையோனியா’, ‘அம்ப்ரா கிரீஸô’, போன்ற மருந்துகள் தூக்கமின்றித் துயரப்படும் மனிதர் களை நலப்படுத்தும்; இயற்கையான இனிய தூக்கத் தை வழங்கும்.

ஒவ்வொருவருக்கும் குறைந்த பட்சம் ஆறு மணிநேர ஆழ்ந்த தூக்கம் போதும். இதனால் தான் இளம்வயதினர் பகலில் தூங்கும் பழக்கத்தை ஆதரிக்கவோ, ஊக்குவிக்கவோ கூடாது. சின்னஞ் சிறு குழந்தைகளைப் பொறுத்தவரை மேலும் அதிக நேரம் தூங்குவது ஆரோக்கியத் திற்கு அவசியம். இதனால்தான் கவிஞர் கண்ணதாசன் “காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே! கால மிதைத்தவறவிட்டால் தூக்கமில்லை மகளே!” என்று அழகிய தமிழில் அர்த்தமுள்ள தாலாட் டைப் பாடினார்.

வயதுக்கேற்ற, பருவத்திற்கேற்ற, உழைப்புக் கேற்ற உறக்கம் அமையாத போதும், உறக்கத்தில் சில அசாதாரணச் செய்கைகள் நிகழும் போதும் ஹோமியோபதி சிகிச்சை மூலம் முழுமையாகக் குணமளிக்கமுடியும்.