குளிக்கிறோம் - தலையில் நீர் விழுந்து கை தேய்க்கும் போதே “முடி” வேர் வேராக கொட்டுகிறது. தலையைத் துவட்டுகிறோம் - துண்டிலே ஒட்டிய படி வருகின்றன முடிகள்.தலை சீவுகிறோம் - கொத்துக் கொத்தாக முடி இழைகள். இப்படி அன்றாடம் உதிர்ந்து கொண்டே போனால் கடைசியில் மொட்டைத் தலையோ வழுக்கைத் தலையோ தான் மிஞ்சும்.பல நூறு கவலைகளோடு இதுவும் ஒரு கவலையாகக் கூடுகிறது!

எந்த ஷாம்பு வாங்கலாம்?  எந்தத் தைலம் பூசலாம்? எந்த மருத்துவரிடம் போகலாம்?  இந்த மன உளைச்சலே அதிகமாகிறது.

வெறும் வணிக நோக்கிலே செய்யப்படும் நூற்றுக்கணக்கான விளம்பரங்களில் எதை நம்புவது? எதை விடுவது? குழப்பம்தான்!

ஒரு பெண்ணின் அழகைக் கூட்டுவதில் தலைமுடிக்கு உள்ள முக்கியத்துவம் அவர்களுக்குத் தான் தெரியும்! திருமணமாக வேண்டிய இளம் பெண்களுக்கு முடி கொட்டினால் அது கொடுமை!

முடி உதிரும் பிரச்சனைகளுக்கு உண்மை யான, பொறுப்பு வாய்ந்த தீர்வுகளைச் சொல்வது ஹோமியோபதி தான் என்பது உலகமே ஒப்புக்கொண்ட உண்மை!

நோயின் தோற்றம், அதன் காரணம், அந்தக் காரணங்களுக்கு அடிப்படையான அறிவியல் பார்வை.  இந்தக் கண்ணோட்டங்களோடு செயல்படுவதுதான் ஹோமியோபதி.   முடி ஏன் உதிர்கிறது? இதற்கு விடை கூறும்முன், முடி என்பது என்ன? அது எப்படி வளர்கிறது? இதை அறிவது அவசியம்.

ஹார்மோன்களின் செல்வாக்கு

முடி தைராய்டு ஹார்மோன்களால் பாதிக்கப்படுகிறது இதுபற்றி ஷெஃப்பீல்ட் என்ற மருத்துவ விஞ்ஞானி ஓர் ஆய்வு நடத்தினார்.  150 பெண்களை அவர் ஆய்வுக்காகத் தேர்ந்தெடுத்தார். இவர்கள் அனைவருமே முடி உதிர்கிறது என்று குறைபாட்டுக் கொண்டவர்கள்.

அந்த 150 பேரில் 16 பேருக்கு ஹைபோதை ராய்டு (hypo thyroid) இருப்பதைக் கண்டறிந்தார். புரத ஸீரம் சேர்த்த அயோடின் அளவை, ரேடியோ அயோடின் படிவச் சோதனை முறையில் கண்டது இம்முடிவு .

முடி வளர்ச்சியும் வயதும்

முடியின் வளர்ச்சி என்பதை அறியும்போது உடலின் பல்வேறு இடங்களில் தோன்றும் முடியைத் தெரிந்து கொள்ளவேண்டும்.

பருவ வயதை எட்டும்போது ஆண் பெண் இரு பாலருக்குமே டெர்மினல் (terminal), முடி வெல்லஸ் (Vellus) முடியை மாற்றிவிடுகிறது. உடலின் மறைவிடங் களான அக்குள், ஆண் பெண் குறிகள் இவற்றின் மேல் முடி முளைக்கிறது.  அது அங்கொன்றும் இங்கொன்றுமாகவும், நீளமாக வும், தலை காய்ந்தும், லேசான நிறம் கொண்ட தாகவும் நீட்டி நிற்கும் வகையிலும் முளைக்கிறது.

போகப்போக கறுக்கிறது. முரடாகவும், சுருண்டும் ஓர் தலைகீழ் முக்கோணப் போக்கிலும் மாறுகிறது.

சிறுவர்களுக்கு வெளிப்படும் முடி சராசரி 13 வயதிலும், சிறுமிகளுக்கு சராசரி 14 வயதிலும் தோற்றம் அளிக்கிறது.  சீரான வளர்ச்சிக்குப் பின்னரே பிறப்பு உறுப்புகளில் முடி வளர்கிறது.

ஆண்களில் 80% பேருக்கும், பெண்களில் 10% பேருக்கும் இருபது முதல் இருபத்தைந்து வயது வரையில் முடி படர்ந்து வளரத் தொடங்குகிறது.

அக்குள் முடி (Axillary hair), பிறப்பு உறுப்பைச் சுற்றி முடி வளரத் தொடங்கிய 2 ஆண்டுகளில் முதலில் வெளிப்படும். லேசாகப் பரவும் இது, இருபது முதல் இருபத்தைந்து வயது வரை அடர்த்தியாகிறது.

முகத்தில் வளரும் முடி, அக்குள் முடி முளைக்கத் தொடங்கிய உடனே அரும்புகிறது.  மேல் உதட்டின் மீது மென்மையாகப் படரத் தொடங்கி மீசையாகி, இது அடர்த்தி பெறுகிறது.  பிறகு கன்னங்களில் தொடங்கி தாடி வளரும் வரை நீடிக்கும்.

கால்கள், தொடைகள், முன்னங்கைகள், வயிறு, தொடைகள், முதுகு, புஜங்கள், தோள்கள், மார்பு என பாலுணர்வு முதிர்ச்சி வரும் வரை இந்த உறுப்புக்களில் டெர்மினல் முடி முளைக்கிறது. காதோரங்களில் முளைக்கும் முடி மத்திய வயது வரை தோன்றுவது இல்லை.

மண்டையின் மீது உள்ள நுண்வடிவ உறைப் பைகள் (follicels) வயது அதிகமாக ஆக, மிகவும் மென்மையான குட்டை வெல்லஸ் (Vellus) முடியை மட்டுமே உருவாக்கும்.  ஆண் ஹார்மோன் சுரப்பிகளின் சுரப்பு நின்று போவதால் வழுக்கை விழுகிறது.  இது பாரம்பரிய வகையைச் சார்ந்தது.

தலை முடி ஏன் உதிர்கிறது?

தலைமுடி உதிர்வதற்கான அடிப்படைக் காரணமாக மண்டையின் மீதுள்ள உறைப்பை களில் ஹார்மோன் சுரப்பு நின்று போவதையே முதல் காரணமாகக் கூறினாலும், பல துணைக் காரணங்களும் உள்ளன.அவைகளில் முக்கிய மானவை :

புரதச்சத்துப் பற்றாக்குறை (Protien deficiency) :

தலைமுடி வளரவும், பாதுகாக்கப்படவும், புரதம் மண்டைப் பகுதியில் சேகரித்து வைக்கப் படுகிறது.  புரதம் உயிர் வளர்க்கும் சத்துக்களில் தலையாயது.  அது பற்றாக்குறை ஆகும் போது தலைமுடிக் கொத்தின் அமைப்பு சிதறுகிறது.  சில சமயங்களில் அதன் நிறமும் மாறும்.  முடிகளின் வேர்களில் வலிமை போய் விடுவதால் அவை முழுமையாக அறுந்துபோகும்.  முடி நீளத்தில் பாதி தொங்கி, மீதி நிற்பதும் ஏற்படும்.

இரும்புச்சத்துப் பற்றாக்குறை (Iron deficiency) :

பொதுவாக இரும்புச்சத்துக் குறைபாடு ரத்தச்சோகை (anaemia)யை ஏற்படுத்தும். முடி கொட்டுவதற்கு ரத்தச்சோகை காரணமாக அமைந்தாலும், ரத்தச் சோகையே இல்லாத சிறு அளவில் இரும்புச் சத்துப் பற்றாக்குறை இருப்பி னும் கூட முடி உதிரும் வாய்ப்பு உண்டு.

துத்தநாகப் பற்றாக்குறை (Zinc deficiency) :

உடல் வளர்ச்சி மற்றும் நலத்திற்கு துத்த நாகம் மிகவும் அவசியப்படுகிறது. இந்தச் சத்து பல உணவுப் பொருள்களிலே இருந்தும்கூட அது ரத்தத்தில் உட்கிரகிக்கப்பட முடியாத சூழல் ஏற்படுவது உண்டு.  எரிதெமா (Erithema) முதலிய சில நோய்களால் பாதிக்கப்பட்டோருக்கு துத்தநாகத்தால் உடலில் ஏற்படும் திறன் குறையும்.  அப்போது முடி கொட்டத் தொடங்கும்.

பாரம்பரிய வகை:

சில பெற்றோர் அல்லது மூதாதையர் வகையினர் மூலம் நேரிடும் ஜீன் அமைப்புகள் தவறாமல் சந்ததியினருக்கு முடி உதிரும் பிரச்சனை களை ஏற்படுத்தும்.

ஹாமில்டன் என்பவர் 312 ஆண்களையும், 214 பெண்களையும் ஓர் ஆய்வுக்காகச் சோதித்தார்.  இவர்கள் அனைவருமே 20 முதல் 89 வயது வரை உள்ளவர்கள்.

பருவ வயதை எட்டும் முன் மண்டைத் தோல் அமைப்பு ஆண் பெண் இருபாலருக்கும் டைப்-1 (Type-I) வகையில்  அமைந்தது.  டைப்-2 (Type-II) வகை  96 சதவீதம் ஆண்களும், 79 சதவீதம் பெண்களும் பருவத்தை எட்டியபின் நேரும் அமைப்பைப் பெற்றனர்.

டைப் 5 முதல் 8 வரை 50 சதவீதம் ஆண்கள் 50 வயதைக் கடந்தவர்கள் மாற்றம் பெற்றனர்.  ஆனால் பெண்களில் எவரும் மேற்படி டைப் 5 முதல் 8 (Type V-VIII) நிலையை அடையவில்லை.

மேற்படி முடி உதிரும் பிரச்சனைகள், இளம் வழுக்கை முதிர்வழுக்கை ஆகிய கோளாறுகளுக்கு உடலுக்குள் ஏற்படும் சத்துப் பற்றாக்குறைகள், சத்தை ஏற்கும் திறன் ரத்தத்தில் குறைந்து போதல் ஆகியவையே காரணம்.

அலோபதி மருத்துவ முறையால் உடலுக்குள் புகும் வீரிய மருந்துகள் மற்றும் ஆண்ட்டி பயாடிக் குகள் ஏற்படுத்தும் விபரீதங்கள் பற்பல.  அவற்றில் முக்கியமானவை உயிர்ச்சத்துகள் நாசமடைவது.

அத்துடன் விளம்பரப்படுத்தப்படும் கண்ட கண்ட ஷாம்புகளும், முடி வளரும் தைலங்களும் முடி கொட்டுவதைத் தடுப்பதற்குப் பதில் சிறிது காலம் கழித்து முடி முழுவதையுமே குப்பென்று கொட்ட வைத்துவிடுகின்றன.

நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

முடி கொட்டுதல் என்பது உங்களுக்கு ஒரு முக்கியப் பிரச்சனை ஆகும்போது, தயங்காமல் ஓர் ஹோமியோபதி மருத்துவரை அணுகவும்.

அவரிடம் விரிவான, முறையான சோதனை யும் ஆலோசனையும் பெறுங்கள்.

ஹோமியோபதி சிகிச்சை :

பின்வரும் ஹோமியோபதி மருந்துகள்மிகவும் வெற்றிகரமாக முடி கொட்டும் பிரச்ச னைக்கு முற்றுப்புள்ளி வைத்து வரலாறு படைத்திருக்கின்றன.

ஆசிட் ப்ளோர் (Acid Flour) :

சில இடங்களில் மட்டும் கொத்தாக முடி உதிர்வது. முடி ஒன்றுடன்ஒன்று ஒட்டிக் கொள் வது, வறண்டு போவது, முறிந்துவிடுவது ஆகிய பிரச்சனைகளுக்கு ஏற்ற மருந்து இது.

பாஸ்பரஸ் (Phosphorus) :

கொத்துக் கொத்தாக முடி உதிர்தல், வெள்ளைப் பொடுகு நமைச்சல் இவைகளுக்கு உகந்தது இது. கோபம், துக்கம், கவலை, மிதமிஞ் சிய அயோடின் பயன்படுத்துதல், அயோடின் உப்பு இவற்றால் ஏற்படும் குறைபாடுகளை இது நீக்கும்.

ட்யூபர்குலீனம் (Tuberculinum) :

காச நோய் வந்துள்ள நோயாளிகளுக்கு நேரிடும் முடி கொட்டுதலுக்கு உகந்தது இது.

கால்சியம் கார்பொனேட் (Calc.Carb) :

ஜலதோஷத்தால் உடனே பீடிக்கப்படு வோருக்கும், மிகுதியான வேலை, கவலை, பீதி, சத்துப் பற்றாக்குறை உணவு, குறிப்பாக ஓ (O) வகை ப்ளட் க்ரூப் உள்ளவரின் முடி கொட்டுதலைத்

தடுக்க ஏற்றது.

சோரினம் (Psorinum) :

தோல் மற்றும் சுரப் பிகளில் வரும் நோய் களுக்குச் சிகிச்சை சீரான அளவிலோ அல்லது முற்றிலுமோ தரப் படாமல் போன வருக்கு ஏற்றது.  உலர்ந்த முடி, ஒளி யின்மை, தலை முடி ஒட்டிக் கொள்வதால் தலையில் ஆங் காங்கே முடி வேர்ப் பிளவு, வெள்ளை முடிச் சுருளு டன் கூடிய வெள்ளைத் தோல் உள்ளோ ருக்கு ஏற்றது.

வின்கா மைனர்        (Vinca minor) :

வியர்வை ஒழுகிக் கொண்டே இருக்கும்.  தலை முடி சடையாகப் பின்னிக் கொள்ளல், மண்டை அரிப்பு, தடுக்க முடியாதவாறு சொரியும் அவா.  வெள்ளை, பழுப்பு மற்றும் கம்பளி வடிவில் முடி சிற்சில பகுதிகளில் காணப்படுவது ஆகியோருக்கு ஏற்றது.

ஸலிசியா (Silicea) :

அறிவு ஜீவுகளுக்கு ஏற்படும் முடிகொட்டு தல். இளம் வயதில் வழுக்கை.  உள்ளங் கால்களில் வியர்வை கொட்டுவதைத் தவிர்க்க உட்கொண்ட மருந்துகளின் பின் விளைவுகள்.  ஊசிபோட்டுக் கொள்ளுதல், உடலாலோ மூளையாலோ மிதமிஞ்சிய வேலை உள்ளோருக்கு இது ஏற்றது.

நேட்ரம் முர் (Natrum Mur) :

நெற்றி மண்டையின் மேற்பகுதி கிருதாக்களில் முடி கொட்டுவது, துக்கம், குற்ற உணர்வு, ஏமாற்றம், பயம், வெறிவேகம், சுயஇன்பம் துய்த்தல், ரத்தச்சோகை உள்ளோருக்கு இது உகந்தது.

லைகோபோடியம் (Lycopodium) :

இளம் வயதில் முடி கொட்டுதல், இளநரை, வயிற்றுக் கோளாறுகளினால் தோன்றும் வழுக் கை, பொடுகு, புகையிலை மெல்லுதல், மது அருந்துதல் ஆகிய பழக்கங்கள் உள்ளோருக்கு இது உகந்த மருந்து.

ஸெலினியம் (Selenium) :

கண் இமைகளில் முடி உதிர்தல், கிருதாக்கள் மற்றும் பிறப்பு உறுப்புக்களில் இருந்து முடி உதிர்தல்.  தலை முடியைத் தொட்டாலே புண்ணாக நோவு ஏற்படுதல் ஆகிய தன்மைகளுக்கு இது ஏற்ற மருந்து.

ஸெபியா (Sepia) :

பெண்களுக்கு ஹார்மோன் மாற்றங்களால் முடி கொட்டுவது உண்டு.  தீராத கடும் தலைவலியினாலும் முடி கொட்டும். இத்தகை யோருக்கு இது மிகச் சிறந்த மருந்து.