மிழகத்தில் இப்போது பரவலாகப் பெய்துவரும் வடகிழக்குப் பருவமழை வேறெப்போதும் இல்லாத அளவிற்கு நிலச்சரிவுகளேயும், உயிரிழப்புகளேயும் ஏற்படுத்தியுள்ளது. ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதாகவும், அணைகள் நிரம்பி வழிவதாகவும், கரையோர மக்கள் பாதுகாப்பாக வெளியேற வேண்டுமென அரசு எச்சரிப்பதாகவும் ஊடகங்கள் தலைப்புச் செய்திகள் வெளியிட்டு வருகின்றன. இவ்வளவு மழை பெய்தும்கூட நமது தமிழ்த் தேசம் வறட்சித் தேசமாக இருப்பதும் குடிநீருக்கே நீண்ட வரிசையில் மக்கள் தண்ணீர் லாரிக்காக காத்திருப்பதும் எதனால் என்று சிந்தித்துப் பார்த்தால் அதிர்ச்சியும் வேதனையுமே மிஞ்சும்.

உலகில் உள்ள மொத்த நீரில் 97 விழுக்காடு உப்பு நீராக, அதாவது கடல் நீராக உள்ளது. எஞ்சிய நீரின் பெரும்பகுதி வட தென் துருவப் பிரதேசங்களில் உறைபனியாக உள்ளது. மேலும் ஆழ்நிலை நிலத்தடி நீராகவும் பூமிக்கடியில் அதலபாதாளத்தில் உள்ளது. எஞ்சிய 3 விழுக்காடு தண்ணீர்தான் நன்னீராக உலக மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.raining

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழையின் மூலம் நமக்கு கிடைக்கும் நீர் 24,000 மி.க.மீ மழைக்காலத்தில் நிலத்திற்குச் சென்ற நிலத்தடி நீர் 23,000 மி.க.மீ. தென்மேற்குப் பருவமழையின் காரணமாக அண்டைமாநில அணைகள் நிரம்பி வழியும் காலத்தில் நமக்குக் கிடைக்கும் உபரி நீர்12,000 மி.க.மீ மொத்தம் 59,000 மி.க.மீ (மி.க.மீ - மிலியன், அதாவது 10 இலட்சம் கனமீட்டர்). இந்த நீரைக் கொண்டு தான் ஆண்டு முழுவதும், விவசாயம், குடிநீர், கால்நடை, தொழிற்சாலை இன்னும் பிறவற்றுக்குப் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் இந்த நீர் நம் முழுத் தேவையையும் நிறைவு செய்கிறதா என்றால் இல்லை.

சுவீடன் நாட்டைச் சார்ந்த நீரியல் வல்லுநர் மாலின் என்பவரின் கணக்குப்படி ஆளுக்கு ஆண்டுக்கு 2000 க.மீ.(கனமீட்டர்) தேவை. இதுவே 1000 க.மீ. ஆக குறைந்தால் அந்த நாட்டில் பொருளாதாரச் சரிவும் மக்களுக்குச் சுகாதாரமற்ற வாழ்க்கையுமே மிஞ்சும் என்று எச்சரிக்கிறார். தமிழ்நாட்டில் ஆளுக்கு ஆண்டிற்கு 900 க.மீ. தண்ணீரே கிடைக்கிறது. இப்பொழுது கிடைக்கும் தண்ணீரின் அளவை வைத்துப் பார்த்தால் நீர் பற்றாக்குறையுள்ள t; தேசம் நம்முடையது என்ற உண்மை விளங்கும்.

நீர் ஓர் உற்பத்திப் பொருள் அன்று. அது இயற்கையின் கொடை. அப்படியானால் இந்தப் பற்றாக்குறையை சரிசெய்ய முடியாதா என்ற கேள்வி எழலாம். தமிழகத்தில் ஆண்டுக்கு சராசரியாக 23 நாட்கள் மட்டுமே மழைநாளாக நாம் கணக்கிடுகிறோம். இந்த மழையின் பெரும்பகுதியும் கடலிலேயே பெய்து விடுகிறது. மழையின் சிறு அளவே நிலத்தில் பெய்கிறது. இந்த மழைநீரைத் தேக்கி வைப்பதற்கென்றே நம் முன்னோர்கள் பல்லாயிரக்கணக்கான ஏரிகளே வெட்டினார்கள். தற்போது தமிழகத்தில் 39,202 ஏரிகள் உள்ளதாக அரசின் புள்ளிவிவரம் கூறினாலும் இந்த ஏரிகளின் நிலைமை கவலைக்கிடமாகவே உள்ளது.

ஏரிகள், கண்மாய்கள், வரத்து வாய்க்கால்களே பாதுகாக்க ஏரிகள் பாதுகாப்புச் சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தது. 2007 அக்டோபர் 1 முதல் இச்சட்டம் நடைமுறையில் இருந்தாலும் இன்றும் நீர்நிலைகளின் மீதான கொடுந்தாக்குதல்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இதில் கூடுதல் வேதனைக்குரிய செய்தி என்னவெனில் மக்கள் நலத் திட்டங்கள் என்ற பெயரில் தமிழக அரசே ஏரிகளே ஆக்கிரமிப்புச் செய்வதுதான். அரசு மருத்துவக் கல்லூரிக்காக முண்டியம்பாக்கம் ஏரியும், விழுப்புரம் பாதாள சாக்கடைத் திட்டத்திற்காக காகுப்பம் ஏரியும், திண்டிவனத்தில் புதிய பேருந்து நிலையத்திற்காக திண்டிவனம் ஏரியும் கொள்ளேப்போய்க் கொண்டிருக்கிறது. சட்டம் கொண்டு வந்த தமிழகஅரசே சட்டத்தை மிதித்துக் கொண்டிருக்கும் போது, மக்கள் சட்டத்தை எப்படி மதிப்பார்கள்? வேலியே பயிரை மேயும் பழமொழிக்கு இதைவிட சிறந்த எடுத்துக்காட்டுத் தேவையா?

ஏரிகளின் நிலைமை இப்படியயனில் ஆறுகளின் நிலைமைதான் என்ன? தமிழ்நாட்டில் சிறிய பெரிய 33 ஆற்றுப்படுகைகள் உள்ளன. மேற்கில் உற்பத்தியாகும் இந்த ஆறுகள் சரிவை நோக்கி அதாவது கடல் இருக்கும் கிழக்குத் திசை நோக்கி செல்கின்றன. நிலவியல் அமைப்புப்படி மழைக்காலத்தில் வெகுவிரைவாக ஆற்றுநீர் கடலில் கலந்து விடுகிறது. இப்படி விரைவாகச் செல்லும் வெள்ள நீரின் வேகத்தை ஓரளவிற்குக் கட்டுப்படுத்தி நீரின் ஓட்டத்திற்கு வேகத் தடையாக அமைவதோடு நீரைச் சுத்திகரிக்கும் பணியும் செய்து வருவதுதான் மணல். பூமிக்கடியில் உள்ள இந்தத் தங்கத்தை இன்னும் 15 ஆண்டுகளுக்கு மட்டுமே வெட்டி எடுக்கமுடியும் என்கிறார்கள். அதற்குள் ஆறுகளிலிருந்து மணல் துடைத்து எடுக்கப்பட்டு விடும் என்ற அபாயநிலை தொடர்கிறது.

பக்கத்து மாநிலங்களில் உள்ள ஆறுகளில் மணலெடுக்க அந்தந்த மாநில அரசுகள் தடைவிதித்திருக்கும் நிலையில் தமிழ்நாட்டு ஆறுகளிலிருந்து மணல் வெகுவமாக சுரண்டப்படுகிறது. ஆறுகளில் மணல் அள்ளா விட்டால் வெள்ளம் கரைக்குமேல் வந்துவிடும் என்று அமைச்சர் துரைமுருகன் பயமுறுத்துகிறார். இவர் செருப்புக் கடைக்குச் சென்றால் செருப்பின் அளவிற்குத் தகுந்தபடி இவரது காலை வெட்டிக் கொள்வாரோ? என்று எண்ணத் தோன்றுகிறது. வெள்ளத்திலிருந்து மக்களேக் காக்க வேண்டுமென்று அமைச்சர் நினைத்தால் ஆறுகளின் கரைகளே உயர்த்துவதும் பலப்படுத்துவதும்தான் சிறந்த வழியாக இருக்கும். உண்மையில் முதலீடில்லா வணிகமாக மணல் கொள்ளே திகழ்வதால்தான், ஊராட்சி ஒன்றியங்களின் வசமிருந்த மணலின் உரிமை மத்திய அரசினால் சிறு கனிமமாக வரையறுக் கப்பட்டு, மாவட்ட ஆட்சியர்களின் கைக்கு மாறியது. அதுவரை ஆறுகளில், கையால் மட்டுமே மணல் அள்ள வேண்டுமென்ற சட்டத்தைத் திருத்தி இயந்திரத்தால் அள்ளலாம் என்று மாற்றி இன்று ஆறுகள், ஆளும் கட்சிக்காரர்களின் வேட்டைக் களமாக உள்ளது. 3 அடி ஆழமும், 5 மீட்டர் அகலமும் கொண்ட அளவுகளில்தான் மணல் அள்ளவேண்டும் என்ற விதிமுறைகளுக்குப் புறம்பாக 15 அடி ஆழம்வரை பாலாற்றில் மணல் கொள்ளேயடிக்கப்பட்டதை உயர்நீதி மன்றம் அமைத்த ஆய்வுக் குழுவே கண்டறிந்துள்ளது.

600 ரூபாய்க்கு விற்கப்படும் மணல் 6000 ரூபாய்க்கு இங்கிருந்து கேரளாவிற்கு கடத்தப்படுகிறது. மலையாளிகள் 12000 ரூபாய்க்கு துபாய், சௌதி உள்ளிட்ட அரபு நாடுகளுக்குக் கப்பல் மூலம் மணலை ஏற்றுமதி செய்கிறார்கள். இப்படித்தான் நம்முடைய இயற்கை வளம் கொள்ளே போய்க் கொண்டிருக்கிறது.

ஆறுகளில் மணல் வளம் குன்றியதாலும் மணல் திருடர்களால் ஆறுகளின் கரைகள் சேதமடைந்ததாலும் மழைக்காலங்களில் வெள்ளநீர் ஊருக்குள் புகுந்துவிடுகிறது. இதே போலப் பல்வேறு ஆக்கிரமிப்புகளால் ஏரிகளின் நீர்க் கொள்ளளவு குறைந்துவிட்டதாலும் அரசின் ஆக்கிரமிப்பினால் ஏரிகள் காணாமல் போனதாலும் மழைநீர் ஊருக்குள் புகுந்துவிடுகிறது. மலை மறைவுப் பிரதேசத்தில் வாழும் நம் தமிழ்ச் சமூகம் மழையை வரவேற்பதற்குப் பதில் வெறுக்கத் தொடங்கும் விபரீதத்துக்கு இதுவே காரணம்.

மழைக் காலத்தில் ஆறுகளின் மூலம் கடலில் சேரும் நீரைச் சேமிக்க ஆறுகளின் குறுக்கே தடுப்பணை (தடுப்புச் சுவர்) கட்டும் திட்டத்திற்கு கடந்த 2008ஆம் ஆண்டே ரூ.550 கோடி நிதி ஒதுக்கியும். இன்று வரை அதற்கான எந்த வேலைத் திட்டத்தையும் தமிழக அரசு தொடங்கவில்லை. இத்தடுப்புச் சுவரினால் கடலில் சேரும் மழைநீரின் பெரும்பகுதியைத் தேக்கி வைக்க முடியும். வெள்ளநீரால் கடலுக்குள் இழுத்துச் செல்லப்படும் மணலும் பாதுகாக்கப்படும்.

சென்னை நகரில் மட்டும் ஆண்டுக்கு சராசரி 1,260 மி.மீ மழை பதிவாகிறது. வடகிழக்குப் பருவமழையினால் மட்டும் 500 மி.மீ மழை பதிவாகிறது. இதே அளவு மழைதான் அதாவது ஆண்டுக்கு 500 மி.மீ மழைதான் ராஜஸ்தான் மாநிலத்திற்கே கிடைக்கிறது. இதைவிடவும் குறைவாக ஆண்டுக்கு 400 மி.மீ மழைதான் எகிப்து நாட்டிற்குக் கிடைக்கிறது. ஆனால் அவர்களால் மட்டும் எப்படி மக்களின் தண்ணீர்த் தேவையை நிறைவு செய்ய முடிகிறது என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.

மழைக் காலங்களில் சென்னை நகரம் நோயாளிகளே உற்பத்தி செய்யும் நகரமாகத் திகழ்கிறது. மக்கள் படகுகளில் பயணம் செய்யும் நிலை. இதற்கெல்லாம் காரணம் என்ன, சென்னை நகரத்தைச் சுற்றியுள்ள ஏரிகள், தனியாராலும் அரசாலும் ஆக்கிரமிக்கப்பட்டு, குப்பை கொட்டுமிடமாக மாற்றப்பட்டு விட்டன. கூவம், அடையாறு, ஆரணியாறு, கொற்றலையாறு போன்ற ஆறுகளும் பராமரிப்பின்றிப் பரிதாப நிலையில் சாக்கடைகளாக மாறியுள்ளன. இதனால் மக்கள் வெள்ளத்தில் தத்தளிக்கிறார்கள். மழைநீரைச் சேமிக்க முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது.

நீரின் பிறப்பிடமாக மலை உள்ளது. ஆனால் அந்த மலையே இன்று கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கிறது. நம்மையும் காவு கொள்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான உதகமண்டலத்தில் அனுமதி பெறாத கல்குவாரிகள் நூற்றுக்கணக்கில் உள்ளன. பாறைகளே உடைப்பதற்காக வெடி வைக்கிறார்கள். இதனால் மலை ஆட்டம் காணத் தொடங்குகிறது.

சுற்றுலாப் பயணிகளேக் கவர்ந்து அதன்மூலம் வருவாயைப் பெருக்க வேண்டும் என்ற நிலையில் தமிழக அரசு சாலை விரிவாக்கத்திற்காக ஆயிரக்கணக்கான மரங்களே வெட்டித் தள்ளியது. மேலும் பல்வகைக் காடுகள் வளர்ப்பிற்குப் பதிலாக ஓரினக் காடுகள், அதாவது தைலமரத்தை நட்டு சில ஆண்டுகளில் வெட்டிக் காசு பார்க்கும் துறையாக வனத்துறை உள்ளது. இதனால்தான் சமீபத்திய மழைக்கு நீலகிரியில் நூற்றுக்கணக்கான இடங்களில் நிலச்சரிவும், உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. இப்போது நியூட்டிரினோ ஆய்வகம் எனும் பெயரில் மலையைக் குடைந்து பூமிக்கடியில் ஆய்வு என்ற பெயரில் ஆபத்தைத் தேடிக்கொள்ள அரசு முயல்கிறது.

1852இல் ஆங்கிலேய அரசால் தமிழகத்தில் உள்ள ஏரிகளேப் பராமரிக்க பொதுப் பணித்துறை உருவாக்கப்பட்டது. பின் அது நீராதாரத்தைப் பாதுகாப்பதற்குப் பதிலாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரி களின் தேவைகளுக்கான ஆய்வுக் கூடமும், ஓய்வுக் கூடமும் கட்டுகின்ற கட்டுமானத் துறையாக மாறியது. 1972இல் அமைச்சராக இருந்த பண்ருட்டி இராமச்சந்திரனின் முயற்சியினால் பொதுப் பணித் துறையில் நீர்வள ஆதார அமைப்பு உருவாக்கப்பட்டது. ஆனால் அது செயல்படவில்லை. பிறகு உலக வங்கியின் இந்தியப் பொறுப்பாளரது வலியுறுத்தலால் 1996இல் நீர்வள ஆதார அமைப்பு செயல்படத் தொடங்கியது. பொதுப் பணித் துறையில் ஒரு பிரிவு அலுவலகமாகவே இது இப்போது செயல்பட்டு வருகிறது.

தென்னக நதிகளே இணைப் பதற்குப் பல இலட்சம் கோடி செலவாகும். இப்படிக் கோடிகளேக் கொட்டி இணைத்தாலும் ஆண்டுக்கு தமிழகத்திற்கு 60 டி.எம்.சி. மிதுஉ - மிஜுலிற்விழிஐd துஷ்யியிஷ்லிஐ உற்ணுஷ்உ க்ஷூளளமி -ஆயிரம் மிலியன் கன அடி, அதாவது 100 கோடி கன அடி) நீர் மட்டுமே கிடைக்கும். இதுவும் உறுதியாகக் கிடைக்கும் என்ற உத்திரவாதமில்லை. ஆனால் தமிழ்நாட்டில் உள்ள ஏரிகளின் ஆக்கிரமிப்பை அகற்றித் தூர்வாரிப் பராமரித்தால் ஆண்டுக்கு 235 டி.எம்.சி. நீர் கிடைக்கும். இதற்கு ஆகும் மொத்தச் செலவு ரூ.5000 கோடிதான். ஆண்டுக்கு 500 கோடி என்று பத்தாண்டுகளில் படிப்படியாக இத்திட்டத்தை நிறை வேற்றினால் நம் மக்களின் நீர்த் தேவையை நிறைவு செய்யலாம்.

தமிழ்நாட்டின் நீர்வளத்தையும், அதன் மூலம் நிலவளத்தையும், வேளாண் உற்பத்தியையும் பாதுகாக்க வேண்டு மானால், ஆறு, ஏரி, குளம், அணை ஆகிய பகுதிகளேப் பாதுகாக்க வேண்டும். இதற்குப் பொதுப்பணி துறையின் கீழ் ஒரு பிரிவாக செயல்பட்டுவரும் நீர்வள ஆதார அமைப்பை நீர் - நீராதார அமைச்சகமாக மாற்றி இதற்கென தனி அமைச்சரை நியமித்து போர்க்கால அடிப்படையில் மேற்கண்ட இயற்கை வளங்களேப் பாதுகாத்தால்தான் அடுத்த தலைமுறையினரின் வாழ்வு வளமாகும்.

ஆக்க உதவி : முனைவர் பழ. கோமதிநாயகம்.