(1922-1989)

-2010  

‘குழந்தைக் கவிஞர்’ என்னும் தொடரைத் தோற்றுவித்த பெருமைக்குரியவர், அழ.வள்ளியப்பா. இவர் பல்வேறு துறைகளில் ஈடுபட்டுப் புகழீட்டும் ஆற்றல் பெற்றிருந்தும் தம் படைப்பாற்றல் முழுவதையும் குழந்தை இலக்கியத்துக்கே அர்ப்பணித்தவர். குழந்தை எழுத்தாளர் சங்கம் என்னும் அமைப்பை உலகத்திற்கே ஒரு புதுமையாய் இவர் தோற்றுவித்தார். முதல் குழந்தைப் புத்தகக் காட்சி, முதல் குழந்தை எழுத்தாளர் புகைப்படக் காட்சி, முதல் குழந்தை இலக்கிய மாநாடு - இப்படி அவர் முதல் முதலாக ஏற்படுத்திய பலதுறைச் சாதனைகள்தாம் தமிழகத்தில் இன்றும் குழந்தை இலக்கியத்தை வளப்படுத்தி வருகின்றன. இவரின் மலரும் உள்ளம் என்னும் படைப்பு மத்திய மாநில அரசுகளின் பரிசு பெற்றது. 

நூல்கள் பாடல்கள்

1. மலரும் உள்ளம் (முதல் தொகுதி)

2. மலரும் உள்ளம் (இரண்டாம் தொகுதி)

3. சிரிக்கும் பூக்கள்

4. பாட்டிலே காந்தி கதை

5. ஈசாப் கதைப் பாடல்கள்

6. பாப்பாவுக்குப் பாட்டு

7. சின்னஞ்சிறு பாடல்கள்

8. வெளிநாட்டு விடுகதைகள்

9. நேரு தந்த பொம்மை

10. சுதந்திரம் பிறந்த கதை

11. பாடிப் பணிவோம்

கதைகள்

12. பர்மா ராணி

13. நீலா மாலா

14. மணிக்கு மணி

15. பாட்டிக்குப் போட்டி

16. நல்ல நண்பர்கள்

17. குதிரைச் சவாரி

18. ரோஜாச் செடி

19. உமாவின் பூனைக்குட்டி

20. அம்மாவும் அத்தையும்

21. மூன்று பரிசுகள்

22. வேட்டை நாய்

23. திரும்பி வந்த மான்குட்டி

கட்டுரை நூல்கள்

24. பிள்ளைப் பருவத்திலே

25. பெரியோர் வாழ்விலே

26. சின்னஞ்சிறு வயதில்

27. கதை சொன்னவர் கதை

28. எங்கள் கதையைக் கேளுங்கள்

29. நேருவும் குழந்தைகளும்

30. மிருகங்களுடன் மூன்று மணி

31. விடுகதை விளையாட்டு

32. நம் நதிகள்

நாடகம்

33. வெற்றிக்கு வழி

ஆய்வு நூல்

34. வளர்ந்து வரும் குழந்தை இலக்கியம்

மொழிபெயர்ப்பு

35. எக்காலத்துக்கும் ஏற்ற கதைகள்

36. ரோகந்தாவும் நந்திரியாவும்

37. மோரா

தொகுப்பு நூல்

38. சிறுவர் கதைப் பாடல்கள்

பரிசு பெற்றவை

மத்திய அரசின் பரிசு பெற்றவை

1. மலரும் உள்ளம் (முதல் தொகுதி)

2. பாட்டிலே காந்தி கதை

தமிழக அரசின் பரிசு பெற்றவை

1. மலரும் உள்ளம் (முதல் தொகுதி)

2. பாப்பாவுக்குப் பாட்டு

3. நல்ல நண்பர்கள்

4. பெரியோர் வாழ்விலே

5. சின்னஞ்சிறு வயதில்

6. பிள்ளைப் பருவத்தில்